ரஷ்யாவால் இருளில் மூழ்கும் ஜேர்மனி... குளிக்கும் நேரம் குறைப்பு !

0

ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு இலக்காகியுள்ள ஜேர்மனி, இப்போதே இருளில் மூழ்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவால் இருளில் மூழ்கும் ஜேர்மனி... குளிக்கும் நேரம் குறைப்பு !
ஜேர்மனியின் செல்வச்செழிப்பான பாவரியா நகரமான Augsburg இருளில் மூழ்கியுள்ளதுடன் எப்போதும் ஆரவாரமாக காணப்படும் நகரமே அமைதியாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி வரலாற்றுச் சின்னங்களில் ஒளிர்ந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப் பட்டுள்ளது. தெருவிளக்குகள் மங்கலாக்கப் பட்டுள்ளதுடன், பெரும்பாலான நீரூற்றுகள் இயங்கவில்லை.

Augsburg மட்டுமின்றி ஜேர்மனியில் பெரும்பாலான நகரங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. 

எரிசக்தி சேமிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின்னர் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜேர்மனி மட்டுமின்றி முக்கிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தற்போது இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் எரிவாயு வழங்கலை பெரிதும் நம்பியிருக்கும் நாடு ஜேர்மனி, அதனாலையே நாடு முழுவதும் எரிசக்தி சேமிப்பை ஊக்குவித்து வருகிறது.

விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?

இருப்பினும், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுத்தால் மட்டுமே ஜேர்மனி எரிசக்தி சேமிப்பில் நிறைவு காண முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, Augsburg மேயர் ஈவா வெபர் தெரிவிக்கையில், இந்த ஆண்டு நகரின் எரிசக்தி கட்டணம் கடந்த ஆண்டு செலவான 15.9 மில்லியன் யூரோக்களிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கும் என்றார்.

இதனால், நகர மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளதாகவும், இக்கட்டான நிலையில் நாம் இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

தேவையற்ற தெருவிளக்குகள், போக்குவரத்து விளக்குகள் உள்ளிட்டவைகளை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்டியோ போரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !

மட்டுமின்றி, குளிக்கும் நேரத்தை குறைப்பதால் எரிசக்தி வீணாவதை தடுக்க முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் ஊக்கு விக்கப்படுகிறது. 

ரஷ்யாவால் இருளில் மூழ்கும் ஜேர்மனி... குளிக்கும் நேரம் குறைப்பு !

மேலும், பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் தெரிவிக்கையில், குளிக்கும் நேரத்தை தாம் குறைத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக எதிர்வரும் மார்ச் வரை எரிவாயு பயன்பாட்டை 15% குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை உறுப்பு நாடுகளிடம் கூறியது. 

ஆனால் ஜேர்மனியை பொறுத்தமட்டில் எரிவாயு பயன்பாட்டை 30% குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings