உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், இமாம் அலி ரைனி. இவரின் மனைவி நூர்ஜஹான். இவர் தனது வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காக குழி தோண்டியுள்ளார்.
அப்போது, ஒரு செப்புப் பாத்திரத்தில் சில நாணயங்கள் கிடைத்துள்ளன. இதனால், குழி தோண்டிய தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுள்ளனர்.
இனி நெடுஞ்சாலைகளில் டிராக்... இதுக்கு எவ்வளவு கட்டணமோ தெரில !
தொடர்ந்து மறுநாள், தொழிலாளர்கள் திரும்பி வந்து மீண்டும் தோண்டத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், ஒரு தொழிலாளி நூர்ஜஹானின் மகனிடம் தங்கக் காசுகள் கிடைப்பது பற்றி கூறியுள்ளார்.
மேலும், அவரிடம் ஒரு நாணயத்தையும் தொழிலாளி கொடுத்துள்ளார். ஆனால், இதனால் பிரச்னை எழும் என நினைத்த தொழிலாளர்கள் பாதியிலேயே வேலையை விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து யாருக்கும் தொழிலாளிகளும், குடும்பத்தாரும் தெரிவிக்காமலேயே இருந்துள்ளனர்.
பின்னர் இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். முதலில் தொழிலாளர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து கிடைக்கப்பட்ட அனைத்து நாணயங்களும் பிரிட்டிஷாரின் 1889 - 1912-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்லிஷாஹர் அலுவலர் அதர் சிங் கூறுகையில், நான் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தேன். தொழிலாளர்களைத் தொடர்பு கொண்ட போது, மொத்தம் 10 நாணயங்கள் கிடைத்தன.
அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !
அனைத்து நாணயங்களும் அரசு கருவூலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் சில தலைமறைவான தொழிலாளர்களைத் தேடி வருகிறோம் எனக் கூறினார்.
Thanks for Your Comments