அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

0

அரசு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பென்ஷன் தொகை கிடைக்கும் என்று சிலரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது தவறு. சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை வழங்கி வருகிறது. 

அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

ஆனால் அது குறித்த விவரங்கள் எதுவும் மக்களுக்கு தெரிவதில்லை. சாதாரண மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்று உள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த திட்டத்தின் கீழ்,

1. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்

2. இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்

3. இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் .

4. ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் .

5. மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் .

6. ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் .

7. 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் .

7 வினாடி விளம்பரத்திற்கு 10 இலட்சம்...  ரம்மி நிறுவன ஊழியர் சொன்ன இரகசியம் !

8. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் .

9. இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது குறித்து யாருக்கும் முழுமையாக தெரிவதில்லை. 

இந்தத் திட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது வரை 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பென்சன் வாங்கியுள்ளனர். 

இதில் பயன் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தகுதிகள் உள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்:

அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்:

ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

விதவையாக இருத்தல் வேண்டும்.

மலிவு விலையில் காய்கறி வாங்க இந்த தந்திரத்தை செய்து பாருங்க ! 

இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய தேசிய திட்டம்:

ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

ஊனம் நிலை 60 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.

ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்:

ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.

ஊனம் நிலை 40 மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம்:

ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

விதவையாக இருக்க வேண்டும்.

ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்:

ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

சட்டபூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டபூர்வமாக பிரிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்:அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்ணாக இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்:

ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருக்க வேண்டும்.

நலிந்தோர் நலத்திட்டம்:

உழவர் அட்டை இல்லாத குடும்பத் தலைவர் இறந்தால் இந்த திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

60 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினராக இருக்க வேண்டும். இந்த உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள ! 

மேலும் இந்தத் திட்டத்தில் நீங்கள் தகுதி உடையவராய் என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் நேரடியாக VAO அலுவலகத்திற்குச் சென்று 

உங்களுடைய சான்றிதழ்களை கொடுத்து இந்தத் திட்டங்களில் நீங்கள் பயன் பெற தகுதி உடையவரா என்பதை தெரிந்து கொள்ளலாம். 

அதன் பிறகு அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்த பிறகு அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளித்தால் மாதமாதம் உங்களுக்கு பென்ஷன் தொகை கிடைக்கும். 

இந்தத் திட்டத்தில் பென்சன் தொகை பெறுவதற்கு குறைந்த செலவு மட்டுமே ஆகும். 

அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !

பென்சன் தொகை வாங்குவதற்கான செலவு மற்றும் இ-சேவை மையத்தில் பதிவு செய்வதற்கான செலவு மட்டுமே உங்களுடையது. வேறு எதற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு யாராவது உங்களிடம் பணம் கேட்டால் அதை நீங்கள் புகார் அளிக்கலாம். இப்படிப்பட்ட திட்டங்கள் இருப்பது சாதாரண மக்களுக்கு இன்னும் தெரியாமலே உள்ளது. 

கருவாடுகளின் மருத்துவப் பலன்கள் மற்றும் பாதகங்கள் பற்றி தெரிந்து கொள்ள ! 

ஒவ்வொரு மக்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதை மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியம். 

அது மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்த திட்டங்களைப் பற்றி மற்றவர்களிடமும் கூறி பயன் பெறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings