தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்த மாவீரன். இந்தியாவின் கிங்மேக்கர்.
நம் சுதந்திரத்திற்காக எதிரிகளை எதிர்த்து நின்று தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் அழகு முத்துக்கோனை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.
குளிக்கும் போது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?
பிறப்பு :மன்னர் அழகு முத்துவுக்கும், ராணி அழகு முத்தம்மாளுக்கும் 1710ஆம் ஆண்டு வீர அழகு முத்துக்கோன் பிறந்தார். 1729ஆம் ஆண்டு அவருடைய தம்பி சின்ன அழகு முத்துகோன் பிறந்தார்.
விடுதலை போராட்டத்தில் வீர அழகு முத்துக்கோனின் பங்கு :
1750ஆம் ஆண்டு தந்தையான மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார்.
தந்தை இறந்த அதே ஆண்டு அண்ணன் வீர அழகு முத்துக்கோன் தன்னுடைய 22வது வயதில் மன்னராக முடிசூட்டி கொண்டார்.
அழகு முத்துக்கோன், முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார்.
ஆண்களுக்கு மார்பகம் ஏன் வளர்கிறது? தெரியுமா?
இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு மருதநாயகம் பிள்ளையை (முகம்மது யூசுப் கானை) போர் நடந்த அனுப்பி வைத்தது.
வீர அழகு முத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் பெத்த நாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகு முத்துவின் வலது கால் சுடப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து 3 மணி நேரம் போர் தொடுத்தார். ஆங்கிலேய படைகள் மற்றும் மருதநாயகம் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப் பட்டார் வீர அழகு முத்துகோன்.
தாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய வீர அழகு முத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த ஆங்கிலேய படை,
இறுதியில் வீர அழகு முத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகு முத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.
உப்பு நீர் கொரோனாவை அழிக்குமா?
நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும், வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகு முத்துகோனையும் நிறுத்தினார்கள்.
மாவீரன் அழகு முத்துக்கோன் 1759ஆம் ஆண்டு பீரங்கியின் மூலம் கொல்லப்பட்டார்.
Thanks for Your Comments