இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன்... பவி டீச்சர் ஓபன் டாக் !

0

கோலிவுட்டில் எப்போதும் வித்தியாசமான முறையில் படம் எடுப்பவர் பார்த்திபன். எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் தனது பரிசோதனை முயற்சியை மட்டும் அவர் கை விட்டதே இல்லை.

இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன்... பவி டீச்சர் ஓபன் டாக் !

கதையே இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை எடுத்து கவனம் ஈர்த்த அவர் அடுத்ததாக 

ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒத்த செருப்பு படத்தை இயக்கி அனைவருக்கும் புருவம் உயர செய்தார்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் இரவின் நிழல் படத்தை இயக்கி இருக்கிறார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

பார்த்திபன், ஆஹா கல்யாணம் சீரிஸில் பவி டீச்சர் கதாபாத்திரம் மூலம் பிரபலமான பிரகிடா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

இன்று வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அதே சமயம், சிங்கிள் ஷாட்டில் படத்தை எடுத்த பார்த்திபனுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன் என்பது குறித்து அவர் விளக்கமளித்து இருக்கிறார். 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், சேலை அணிந்து சென்றால் சரியாக இருக்கிறதா? என பலமுறை சரி செய்யும் பெண் தான் நான்.

ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அதற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார். 

சொல்ல முடியாத பாலின நோய்கள் தெரியுமா? உங்களுக்கு !

ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது. எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படி ஒரு சீனும் இருக்கு. 

இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன்... பவி டீச்சர் ஓபன் டாக் !

அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என்று என் பெற்றோரிடம் எடுத்துக் கூறி இருந்தார் பார்த்திபன். 

பின் அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் இந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கவர்ச்சியாகவே இருக்காது. 

அங்கே புனித மட்டுமே தெரியும். இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings