ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் அப்பெண் தனது மனைவி என்ற காரணத்திற்க்காக பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை அணுகுவது பாலியல் துன்புறுத்தலில் தான் அது சேரும்.
இப்படி ஒரு தீர்ப்பினை சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. அந்த தீர்ப்பு குறித்து பார்ப்போம்:
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும் போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
வெண்ணெய் சேர்த்து சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருடைய மனைவியின் கோரிக்கையை ஏற்று கேரள கீழ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அவருடைய கணவர் மேல் முறையீடு செய்திருந்தார். பிறகு கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை கையிலெடுத்து உறுதி செய்து தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பில், திருமணம் ஆகியிருந்தாலும் கணவன் தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டால்
சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை என்று கருதி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கலாம்.
திருமணம் சார்ந்த உறவுக்குள் பாலியல் வல்லுறவு குற்றம் அல்ல என்பதற்கான தடை செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவு கூறுவது என்ன வென்றால் கணவன், மனைவியின் சம்மதத்தைப் பெறாமல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவு என்று வரையறை செய்கிறது.
உதடுகள், பற்களை பராமரித்து சிறப்பாக அழகுப்படுத்திக் கொள்ள !
அதே நேரத்தில் திருமண உறவில் ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெறாமல் அப்பெண்ணினுடைய கணவன் உறவு கொள்வது இந்திய நாட்டில் குற்றம் அல்ல என்பதனை
எதிர்த்து திருமண உறவுகுட்பட்ட பாலியல் வல்லுறவை சட்டப்படி குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சில பெண்ணியவாதிகளும்,
முற்போக்காளர்களும், பாலின சமத்துவ செயற்பாட்டாளர்களும் நீண்ட காலமாக இதற்காக போராடி வருகின்றனர்.
திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக மனைவியின் விருப்பமில்லாமல் அவளை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கணவன் கொள்ளக்கூடாது.
கணவன் என்பவர் வாழ்க்கையில் ஒரு துணை தானே தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலுக்கு உரிமையாளர் கிடையாது என
உயிரை பறிக்கும் இந்த ஷிகெல்லா வைரஸ் என்ன செய்யும்? அறிகுறிகள் என்ன?
கேரள உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்த தீர்ப்பினை அங்குள்ளவர்கள் முக்கியமானதொரு தீர்ப்பாக இதனை பார்க்கிறார்கள்.
Thanks for Your Comments