பள்ளிக் குழந்தைகள் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் !

0

பொதுச்சாலையை கடக்கும் பொழுது குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழே விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. 

பள்ளிக் குழந்தைகள் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் !
பொதுவாக சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் தனியாக செல்ல அனுதிக்க கூடாது. 

எப்போதும் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் சாலைகளில் கடைபிடிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டே சாலை பாதுகாப்பு குறித்த அறிவை பெறுகிறார்கள் 

என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் பொழுதும் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். 

அவர்கள் எந்த வயதில் தனியாகவே சாலைகளில் செல்ல இயலும் என்பதையும் பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும்.

குழந்தைகளே! சாலை, விளையாட்டு மைதானம் அல்ல. சாலையில் கிரிக்கெட் ஆடுதல், பம்பரம், கோலி, பட்டம் விடுதல், பந்தாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டாம். 

விளையாட விளையாட்டு மைதானம் செல்லவும். சாலை, போக்குவரத்திற்கு மட்டுமே. சாலையில் விளையாடினால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம்.

சாலை விதிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும்.

18 வயது ஆன பிறகே வாகனம் ஓட்ட வேண்டும்.

இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம் !

பள்ளிக்கு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை :

நடைபாதையில் மட்டுமே செல்ல வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் இடது ஓரமாக நடந்து செல்ல வேண்டும்.

சாலைகளில் எந்த வித பதட்டத்துடனும் செல்லாதீர்கள். சாலைகளில் வேகமாக செல்லுவதும், ஓடுவதும் கூடாது.

சாலைகளை கடப்பதற்கு என குறிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை கட்டமிடப்பட்ட இடங்களில், நடை மேம்பாலங்கள், 

போக்குவரத்து கட்டுபாட்டு சமிக்ஞை உள்ள இடங்கள் போன்றவற்றில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்.

போக்குவரத்து கட்டுபாட்டு விளக்குகள் உள்ள இடங்களில் பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். 

போக்குவரத்து காவலர் உள்ள சாலையை கடக்கும் இடங்களில் அவரின் இசைவுக்கேற்ப சாலைகளை கடக்க வேண்டும்.

தனியா பிரியாணி செய்வது எப்படி?

சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தைக் கடந்து சாலைக்கு செல்லும் போது, சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் தெரியாமல் போகலாம். 

ஏனென்றால் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் நமது உயரத்தைவிட அதிகமாக இருக்கலாம். எனவே அகலமான சாலையில் மையத்தில் தீவுத்திடல் (ஐலாண்ட் - Island) இருந்தால் இரண்டு பகுதிகளாக கடக்க வேண்டும். 

ஒரு பகுதியை முதலில் கடக்க வேண்டும். பின்னர் நின்று பார்த்து மறுப்பகுதியைக் கடக்க வேண்டும்.

ஒரு வழிப்பாதைகளை கடக்கும் பொழுது வாகன வகைக்கேற்ப ஒதுக்கப்பட்ட எல்லா வழிகளிலும் வாகனங்கள் செல்லாமல் இருக்கும் பொழுதே கடக்க வேண்டும்.

திருப்பங்களிலோ, வளைவுகளிலோ ஒரு போதும் சாலையை கடக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்க்க இயலாது.

சாலையை ஓடிக்கடக்க முயற்சிப்பது தவறானதாகும். ஏனெனில் அவ்வாறு செல்லும் பொழுது தவறி கீழே விழ வாய்ப்புள்ளது. அது பெரும் அபாயத்தை விளைவிக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings