பயணம் செல்வது என்றாலே பலருக்கு அலாதி பிரியம். அது பேருந்து, ரயில், விமானம், பைக், சைக்கிள் ஏன் பலர் நடந்து கூட பயணம் மேற்கொள்கின்றனர். இப்படி பல வகையான பயணங்கள் உள்ளன.
சாதாரணமாக தினமும் அலுவலகம் செல்வதும் ஒரு பயணம் தான் அல்லது ஒரு பத்து நாட்கள் விடுப்பு எடுத்து விட்டு ஊர் விட்டு ஊர் செல்வதும் ஒரு பயணம் தான்.
இப்படி பயணங்கள் வேறுபட்டாலும் எல்லா பயணத்திலும் ஸ்பாய்லர் என்ற ஒரு ஜீவன் நமக்காகவே காத்திருக்கும்.
அது நம் நண்பர்களில் ஆரம்பித்து பயணத்தில் தென்படும் யாரோ ஒரு ஸ்ட்ரேன்ஜர் உட்பட யாராவது ஒருவராக இருக்கும். அப்படி சமீபத்தில் ஒரு பெண் செய்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?
ப்ராண்டன் (Brandan) என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு நான் பார்த்ததிலேயே மோசமான குற்றம் இது, ஒரு பெண் ஏழு மணி நேர விமான பயணம் முழுவதும்
மற்ற பயணிகளின் மீது தாண்டி தாண்டி அவர்களை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தார் என்ற பதத்தில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த வீடியோவில் ஒரு பெண் விமானத்தில் ஜன்னல் சீட்டுக்கு போவதற்காக முன்னாலிருந்த இரண்டு பயணிகளை தாண்டி போக வேண்டியிருந்தது.
அதற்காக அவர் முதல் சீட்டில் கால் வைத்து ஏறி இரண்டு பயணிகளை தாண்டி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.
ஒவ்வொரு முறை அவர் ஏதாவது தேவைக்காக எழுந்துக் கொள்ளும் போதும் இதே போல் செய்ததாக கூறப்படுகிறது. அதில் அவர் தாண்டிய முதல் பயணி ஒரு குழந்தையோடு அமர்ந்திருந்தார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் அந்தப் பெண் விமர்சனத்துக்கு உள்ளானார்.
ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
பொதுவாகவே விமானங்களில் எக்கானமி க்ளாஸ் என்று அழைக்கப்படும் மூன்றாம் தர இருக்கைகள் அந்தளவு வசதியாக இருக்காது. நம்மூர் ஏசி பேருந்துகளில் செல்வது போல் தான் இருக்கும்.
இந்நிலையில் இந்தப் பெண் செய்த செயல் பலரது எதிர் விமர்சனத்திற்கும், சிலரது ஆதரவுக் குரலுக்கும் உள்ளாகியுள்ளது.
The most criminal activity I’ve ever seen on an airplane. This woman was hopping over other passengers the whole 7 hour flight. @PassengerShame pic.twitter.com/drET3BGBWv
— brandon🚀 (@In_jedi) June 15, 2022
Thanks for Your Comments