இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதும் மாற்று எரி சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த உலகம் நீண்ட நாட்களுக்கு பெட்ரோல்/டீசல் போன்ற எரிபொருளை நம்பி இருக்க முடியாது. இதனால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகிறது.
அரசு சார்பில் நடத்தப்படும் போக்குவரத்துக் கழகங்களிலும் எலெக்டரிக் பஸ்களின் பயன்பாடு துவங்கி விட்டது.
சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி?
எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல்கள் தேவையை முடிந்தளவிற்குக் குறைக்க வேண்டும் என உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
அதற்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹைட்ராலிக் டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் பேசினார்.
அப்பொழுது இந்தியாவில் மத்திய அரசு ஒரு புது விதமான போக்குவரத்தை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாகப் பேசினார். இது தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசியபோது இந்தியாவில் டில்லி மும்பை தேசிய நெடுஞ்சாலையை எலெக்டரிக் நெடுஞ்சாலையை மாற்றப்போவதாக அரசு திட்டமிட்டுள்ளது குறித்துப் பேசினார்.
இந்தியாவிற்கு இந்த திட்டம் புதிது தானே தவிர தொழிற்நுட்பம் புதிது அல்ல. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் டிராம்கள் செயல்பட்டன. இன்றும் கொல்கத்தாவில் இந்த டிராம்கள் செயல்பாட்டில் உள்ளன.
சுவையான செட்டிநாடு இட்லி பொடி செய்வது எப்படி?
இது சாலைகளில் டிராக் அமைத்து அதில் டிரக் பஸ் போன்ற வாகனம் செல்லும் இந்த டிராம்கள் பெரும்பாலும் எலெக்ட்ரிக் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது.
இதே தொழிற்நுட்பத்தை தற்போது நெடுஞ்சாலைகளிலும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி தற்போது உள்ள நெடுஞ்சாலைகளுக்கு அருகே சாலைகளுடன் ஒரு டிராக் அமைக்கப்பட்டு அதற்கு மேல் எலெக்ட்ரிக் கம்பிகள் பொருத்தப்படும்.
அதில் உள்ள எலெக்டரிக் சக்தியைக் கொண்டு அந்த டிராக்கில் பஸ் இயங்கும். இது பொது போக்குவரத்தாகப் பயன்படுத்தப்படும்.
இதனால் குறைவான விலையில் ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும்.
கிட்டத்தட்டச் சென்னை மும்பையில் எலெக்டரிக் ரயில் இயங்குகிறதே அதே கான்செப்ட் தான் ஆனால் இது நெடுஞ்சாலைகளில் இயங்கும்.
முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக டில்லி முதல் முன்பை வரை உள்ள நெடுஞ்சாலையை மின் மயமாக்க ரூ2.5 லட்சம் கோடி பணத்தைச் செலவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?
சமீபத்தில் மத்திய அரசு டில்லி முதல் குருகிராம் வரையிலான துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையைத் திறந்து வைப்பது குறித்து கூறியது.
அதன்படி வரும் 2023ம் ஆண்டு இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும். இது மொத்தம் 29 கி.மீ நீளம் கொண்டது.
முற்றிலும் பாலம் மூலமாக இது கட்டமைக்கப் பட்டுள்ளது. இதில் 19 கி.மீ ஹரியானா மாநிலத்திலும் 10 கி.மீ டில்லியிலும் வரும்படி கட்டமைக்கப் பட்டுள்ளது.
இதற்காக ரூ9000 கோடி பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்காக 2 லட்சம் மெட்ரிக் டன் இரும்பும், 20 லட்சம் க்யூபிக் மீட்டர் கான்கிரீட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
Thanks for Your Comments