சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.
மும்பையில் பரபரப்பான சாலைகளில் எளிதாக சாலையை கடக்கும் வகையில், மக்களே சிக்னலை மாற்றும் பட்டனை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
வீட்டிலிருந்து வாகனத்தை எடுக்கும் பொழுது, பார்த்து கவனமா போய்ட்டு வாங்க என அக்கறையுடன் ஒருவர் சொல்வதும், அது சரி, நாம ஒழுங்காப் போனாலும்,
எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே என மற்றவர் பதிலுரைப்பதும் பொதுவாக எல்லா வீடுகளிலும் நிகழக் கூடியது.
அனைவருமே ஒழுங்கோடு வாகனம் ஓட்டுகிறோமே என்றால் யார் தான் தவறிழைப்பது?
சாலையை கடப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியதாகும்.
அதிலும் பரபரப்பான காலை, மாலை நேரத்தில் விபத்துகளில் சிக்கி விடாமல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாதசாரிகளின் இந்த பதற்றத்தையும், காத்திருப்பையும் குறைக்கும் வகையில் நடந்து செல்லும் மக்களே
சிக்னலை மாற்றி சாலையை கடக்கும் முறை சோதனை முயற்சியாக மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மும்பை மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சிக்னல்களில் பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு பெட்டியில் பட்டன் வைக்கப்பட்டு உள்ளது.
சாலையை கடக்கும் மக்களில் யாராவது ஒருவர் அந்த பட்டனை அழுத்தினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கும். அதன் பின் மக்கள் அனைவரும் எளிதாக சாலையை கடக்கலாம்.
புற்றுநோயை தவிர்க்க சாப்பிட கூடாத உணவுகள் !
சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி விடுமோ என்ற அச்சமும் தேவையில்லை.
இதன் மூலம் மக்கள் சாலை கடக்கும் போது, இந்த பட்டனை அழுத்தி வாகனங்களை நிறுத்தி விட்டு எளிதாகக் கடந்து செல்ல முடியும்.
இந்த முறையை மும்பையில், டிமார்ட், சுவாமி விவேகானந்தா சவுக், கொப்பார் பகுதிகளில் சோதனை முயற்சியாக வைக்கப்பட்டது.
இதில் சாதகமான முடிவுகளும் மக்களிடையே வரவேற்பும் கிடைத்ததை அடுத்து, புருஷோத்தம் கேதர் சவுக், சுவாமி சம்ரத் சவுக், ஏரோலி,
தானே-பேலாபூர், முகுந்த் கம்பெனி, ரபானே ஜங்ஷன் ஆகிய இடங்களிலும் இந்த சிக்னல் பட்டன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டன் வைக்கப்பட்ட இரு நாட்களில் மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் பட்டனை அழுத்தி சாலையை கடந்து சென்றனர்.
இந்த முறையை சாலையை கடக்க வசதியாக இருப்பதாகவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து நவிமும்பை மாநகராட்சி ஆணையர் என்.ராமசாமி கூறுகையில், ‘ போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து சிக்னல் மிகவும் முக்கியமானதாகும்.
தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !
அதிலும் காலை, மாலை பள்ளி நேரத்தில் ஏராளமான மாணவர்கள், அலுவலகத்து செல்பவர்களும் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலரும் சிரமப்படுவார்கள்.
இதைத் தவிர்க்கும் வகையில், 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒவ்வொரு சிக்னல் கம்பத்தின் அருகே ஒரு சிறிய பெட்டியில் ஒரு பட்டனை பொருத்தினோம்.
அந்த பட்டனை பாதசாரிகள் யார் வேண்டுமானாலும் அழுத்தினால், சிவப்பு விளக்கு எரிந்து சாலையை எளிதாகக் கடக்க முடியும்.
சாலையை கடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்துக்குள் கடந்தபின் தானாகவே பச்சை விளக்கு எரியத் தொடங்கும்.
இந்த திட்டத்தின் மூலம், நடந்து செல்பவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்கள் எளிதாக நடந்து செல்லவும், சாலையைக் கடக்கவும் வழிவகுக்கிறது.
ஆணும் பெண்ணும் - வித்தியாசங்கள் உண்டு !
இந்த முறைக்கு பாதசாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.
Thanks for Your Comments