ரேஷன் அட்டை மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் அரசு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. அதில் பல லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.
ஆனால் ரேஷன்கார்டு வைத்திருக்கும் சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
அதனால் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக அரசு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தியது.
சுவையான வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி?
அதன் மூலமாக ரேஷன் கடைகளில் நடைபெறும் பதுக்கல், ஒதுக்கல் எல்லாம் தற்போது குறைந்துள்ளது.
இருந்தாலும் ஒரு சில நேரங்களில் வேலைகளை ஒதுக்கி விட்டு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கலாம் என்றால்,
அந்தப் பொருள் இல்லை இந்த பொருள் இல்லை என்று அழைக்கழிக்கும் சம்பவங்கள் ரேஷன் கடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில சமயங்களில் ரேஷனில் வாங்கும் பொருள்களின் அளவுகளை கடைக்காரர்கள் குறைத்து விடுகிறார்கள்.
அரசு ரேஷன் அட்டைக்கு ஒதுக்கிய பொருள் கூடுதலாக இருப்பினும் நமக்கு கிடைப்பது குறைவாக தான் இருக்கிறது.
இதில் சில்லறை பாக்கி என்ற கட்டாயத்தின் பெயரில் சிறு சிறு வீட்டுப் பொருட்கள் திணிக்கப்படுகின்றன.
இது போன்ற பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ளும் போது, ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை எப்படி அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது?,
சுவையான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி?
யாரை எப்படி புகார் அளிப்பது?, நம்முடைய கைப்பேசியை எப்படி பயன்படுத்துவது? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி புகார் அளிக்கவும், ரேஷன் கடை ஊழியர் உங்களை ஏதாவது தரக்குறைவாக நடத்தினால்
அவர் மீது புகார் அளிக்கவும் 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதனைப் போலவே ஆன்லைனில் புகாரை பதிவு செய்ய www.tnpds.gov.in என்ற உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்திற்குச் சென்று நீங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
அந்த இணைய தள பக்கத்தில் உங்களின் பெயர், மொபைல் நம்பர், இ-மெயில் ஐடி ஆகியவற்றை கொடுத்த பிறகு, எந்தவிதமான பிரச்சினை என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
அதில் FPS Shopkeeper (நியாயவிலை கடைக்காரர்) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, உங்கள் பிரச்சனையை நீங்கள் பதிவு செய்யலாம். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு புகார் பதிவு செய்த ஐடி உடனடியாக வந்து விடும்.
நம்முடைய உணவே மருந்து தெரியுமா?
அந்த ஐடி-யை பயன்படுத்தி, நீங்கள் அளித்த புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதைத் தவிர உங்கள் செல்போன் மூலமே நீங்கள் எளிதாக புகார் அளிக்கலாம்.
அதற்காக TNEPDS என்ற மொபைல் ஆப் உள்ளது. அதனை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து, ரேஷன் அட்டையில் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணை கொடுத்து உள் நுழையலாம்.
அதன் பிறகு உங்கள் புகாரை அதில் நீங்கள் பதிவு செய்யலாம். இப்படி உங்களால் புகாரை பதிவு செய்ய முடியவில்லை என்றால்,
நேரடியாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று வட்ட வழங்கல் அதிகாரியை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம். உங்களுடைய புகார் நியாயமானதாக இருந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
அப்படி உங்கள் புகார் நியாயமானதாக இருக்க வேண்டுமென்றால் ரேஷன் கடை குறித்த முழு விவரங்களையும் நீங்கள் முன்னதாக அறிந்து இருக்க வேண்டும்.
அது மிகவும் எளிது தான். அதற்கு www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று,
பொது விநியோக திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்தால், உங்கள் மாவட்டத்திலுள்ள ரேஷன் பொருள்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர TNEPDS என்ற மொபைல் ஆப் மூலமாகவும் நீங்கள் பொருள் வாங்கும் ரேஷன் கடையில் எவ்வளவு பொருட்கள் இருப்பில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சத்து மாவு பாசி பருப்பு அடை ரெசிபி !
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பொருட்கள் வாங்கியுள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது தவிர ஒரு எளிய வழியும் உள்ளது.
நீங்கள் ரேஷன் அட்டையில் கொடுத்துள்ள மொபைல் எண்ணில் இருந்து PDS 101 என்று டைப் செய்து 9980904040 என்ற நம்பருக்கு அனுப்பினால்
உங்கள் ரேஷன் கடையில் எந்தெந்த பொருள்கள் இருப்பில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதனைப் போலவே PDS 102 என்று டைப் செய்து 9980904040 ரேஷன் கடை திறந்துள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?
மேலும் PDS 107 என்று டைப் செய்து 9980904040 என்ற எனக்கு அனுப்பினால், ரேஷன் கடையில் உங்களுக்கு பொருள் இல்லை என்று கூறினால் நீங்கள் அதில் புகார் அளிக்கலாம்.
இதையடுத்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றொன்று என்னவென்றால், ரேஷன் அட்டையில் 5 வகைகள் உள்ளது. அதில் ஒவ்வொரு அட்டைக்கும் ஏற்றவாறு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
Thanks for Your Comments