மங்கி பாக்ஸ் என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவக் கூடியது.
கொரோனா தொற்றின் விளைவுகளிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், மங்கி பாக்ஸ் நோய் தீவிரமாக பரவி வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொல்ல முடியாத பாலின நோய்கள் தெரியுமா? உங்களுக்கு !
அறிகுறிகள் என்ன?
மங்கி பாக்ஸ் ஃஓயின் அறிகுறிகள் தானாகவே ஒரு சில வாரங்களில் மறைந்து விடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தாலும்,
இந்நோயால் தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, உடல் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். சிலருக்கு அதிக சோர்வு, உடல் குளிர்ச்சி நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவையும் ஏற்படலாம்.
இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், நிமோனியா, குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில், மங்கி பாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களில் 1% முதல் 10% பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மங்கி பாக்ஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக 6-13 நாட்களில் தோன்றும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சில சமயங்களில் இதன் அறிகுறிகள் வெளிப்பட மூன்று வாரங்கள் கூட ஆகலாம் மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு 5 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை, ஒற்றை தலைவலி, தசை வலி, முதுகு வலி, வீங்கிய சுரப்பிகள், குளிரால் நடுக்கம், சோர்வு ஆகியவை சில பிரதான அறிகுறிகள் ஆகும்.
நிணநீர் கணுக்களின் வீக்கம் குரங்கு அம்மையின் சிறப்பியல்பு அம்சங்களில் ஒன்றாகும். நோய் அறிகுறிகள் தோன்றி சில நாட்களுக்குப் பிறகு நோயாளிகளில் சோர்வு அதிகமாகிறது.
விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்? சில டிப்ஸ் !
இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு:
இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாக இருந்து வருகிறது. யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?
மங்கி பாக்ஸ் உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட) வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கூடுதலாக, எலி, அணில், குரங்குகள் போன்ற விலங்குகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகமுள்ளது.
எனவே இவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
போர்னை நம்முடைய சுய வாழ்க்கையோடு ஒப்பிடுவது கூடாது !
சுகாதார பணியாளர்கள் :
மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் ஏற்படும் தொடர்பு மூலமாக இந்த வைரஸ் பிற மனிதனுக்குப் பரவுகிறது.
இதில் நேருக்கு நேர், தோலிலிருந்து தோல், வாயிலிருந்து வாய் அல்லது வாயிலிருந்து தோல் தொடர்பு, பாலியல் தொடர்பு உட்பட பல வகைகள் தொற்று பரவ வாய்ப்புள்ளது கண்டறியப் பட்டுள்ளது.
மங்கி பாக்ஸ் நோயாள் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள
கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஏனெனில் இவர்களுக்கு தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை இல்லாத சாமானிய மக்களுக்கு கூட அரசு பென்சன் தொகை !
அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் :
WHO இன் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகள், இளம் குழந்தைகள் மற்றும் அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படலாம்,
மேலும் அவர்கள் அரிதான சந்தர்ப்பங்களில், மங்கி பாக்ஸால் இறக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படாத போது அல்லது எதிர்பார்த்தபடி செயல்படாத போது நோயெதிர்ப்பு குறைபாடு நோய் அல்லது கோளாறு ஏற்படுகிறது.
மரபணு காரணத்தினால் குறைபாட்டுடன் பிறந்தவர்கள் முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
200 க்கும் மேற்பட்ட முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை என்ன?
குரங்கு அம்மை காய்ச்சலுக்கு இன்னும் நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இதுவரை எதுவும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து அதற்கேற்ற சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
மருத்துவர்கள் இதற்கு பொதுவாக ஆண்டி வைரல் மருந்துகளை அளிப்பதுண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளும் அளிக்கப்படும்.
நிலாவுக்கு புல்லட் ரயில் விடுறாங்களாம்… இது எப்படி சாத்தியம் தெரியுமா?
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப் படுகிறார்கள். அமெரிக்காவில் மங்கி பாக்ஸ் சிகிச்சையில் சின்னம்மைக்கு செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 28 நாட்களில் செலுத்தப்படுகிறது. சிகிச்சையின் முக்கிய அம்சமாக தனிமைப்படுத்தல் அறிவுறுத்தப் படுகின்றது.
Thanks for Your Comments