சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

0

நாம் அனைவரும் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கப் போகும் போது அதில் சில விபரங்கள் கேட்கப்படும். அதற்கு நாம் சரியாக பதில் அளித்தால் மட்டுமே பணத்தை ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எடுக்க முடியும்.

சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

அதன்படி ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் போது சேவிங்ஸ் அக்கவுண்ட் (சேமிப்பு கணக்கு) மற்றும் கரண்ட் அக்கௌன்ட் (நடப்புக் கணக்கு) ஆகிய இரண்டும் தோன்றும். 

அதில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சிலருக்கு அதில் எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக இருக்கும். அவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். 

இவை இரண்டுமே பல்வேறு செயல் நோக்கங்களுக்கு உருவாக்கப்பட்ட இருவேறுபட்ட கணக்குகள்.சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு ஆகிய இரண்டுக்கும் பல்வேறு அடிப்படை வித்தியாசங்கள் உள்ளன.

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

சேமிப்பு கணக்கு (savings account):

சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கௌன்ட்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சேமிப்பு கணக்கு என்பது அதன் பெயரில் குறிப்பிடப் பட்டுள்ளது போல சேமிப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட கணக்கு. ஒருவர் தனியாகவோ அல்லது வேறு யாருடனும் கூட்டாக சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். 

இதில் ஒருவர் தன் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பொதுத்துறை வங்கியாக இருந்தால் சுமார் 1000 ரூபாய், தனியார் வங்கியாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்த சேமிப்பு கணக்கில் பணப் பரிவர்த்தனைகள், அதாவது டிரன்சாக்சன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் நடப்பு கணக்கோடு ஒப்பிடும் போது சேமிப்பு கணக்கில் அதிக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. 

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

ஒரு ஆண்டுக்குள் பத்து லட்சத்திற்கும் மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

நீங்கள் அதிக பண பரிவர்த்தனை செய்பவராக அல்லது சேமிப்பு கணக்கில் அதிகமாக செக் வழங்குபவராக இருந்தால் உங்கள் பணப்பரிவர்த் தனைக்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், 

உங்கள் வருமானத்தை பற்றி கேள்வி எழுப்பவும் வங்கிகளுக்கு அனைத்து உரிமையும் உண்டு. இதில் வங்கிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் நீங்கள் இருப்பு வைத்துள்ள தொகைக்கு ஏற்றவாறு வட்டி வழங்கப்படும். 

இதுவே சேமிப்பு கணக்கு. அதாவது நீங்கள் பயன்படுத்துவது சேமிப்பு கணக்கு தான். உழைக்கும் மக்களுக்கு ஒரு தனி சேமிப்பு கணக்கு உள்ளது. 

வயதானவர்களுக்கு தனி, பெண்களுக்கு தனி மற்றும் குழந்தைகளுக்கு என வேறுபட்டுள்ளது. அதன்படி மொத்தம் ஆறு வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன.

வழக்கமான சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

இது ஒரு சில அடிப்படை விதி முறைகளில் திறக்கப் படுகின்றது. இந்த கணக்கில் எந்த ஒரு நிலையான தொகையும் வழக்கமாக டெபாசிட் செய்யப்பட வில்லை. 

இது பாதுகாப்பான வீடு போல பயன்படுத்தப் படுகிறது. நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். குறைந்தபட்ச இருப்புக்கான நிபந்தனைகளும் உள்ளன.

சம்பள சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கௌன்ட்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்தக் கணக்குகளை வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்காக நிறுவனங்கள் சார்பாக திறக்கின்றன. அதற்கு வட்டி விகிதத்தை வங்கிகள் வழங்குகிறது. இது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுகின்றது. 

மாதம் மாதம் சம்பளம் கொடுக்கும் நேரம் வரும்போது வங்கி நிறுவனத்தின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து ஊழியர்களின் கணக்கில் வைக்கிறது. 

அத்தகைய கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு நிலை எதுவும் இல்லை. அதுவே மூன்று மாதங்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் அது வழக்கமான சேமிப்பு கணக்காக மாறும்.

அதிகமாக கோபப்பட்டால் இதெல்லாம் நடக்கும் !

மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

இது வழக்கமான சேமிப்பு கணக்கை போலவே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் வழக்கமானதை விட மூத்த குடிமக்களுக்கு அதிக கட்டணம் வழங்கப் படுகிறது. 

மூத்த குடிமக்கள் இந்த கணக்கை திறந்து கொள்ள முடியும். ஏனென்றால் இதற்கு வட்டி அதிகம். மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டங்கள் உடன் இந்த வங்கி கணக்கு இணைக்கப் பட்டுள்ளது. 

இதில் ஓய்வு ஊதிய நிதி அல்லது ஓய்வூதிய கணக்கில் இருந்து நிதி திரும்ப பெற முடியும்.

மைனர்கள் சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

இது குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு. குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இதில் குழந்தைகளின் படிப்புக்கான வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். 

இந்த வங்கி கணக்குகள் சட்டபூர்வ பாதுகாவலரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே திறக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு பத்து வயதாகும் போது அவர் தனது கணக்கை தானே இயக்க முடியும். 

குழந்தைக்கு பதினெட்டு வயது இருக்கும் போது அது வழக்கமான சேமிப்பு கணக்காக மாறிவிடும்.

அமைதியான இதயம் ஆபத்தான அறிகுறி !

ஜீரோ இருப்பு சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட், கரண்ட் அக்கௌன்ட்... வித்தியாசம் என்ன?

இதில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு இரண்டு நன்மைகள் உள்ளன. திரும்பப் பெறுவதற்கு வரம்பு உள்ளது. ஆனால் இருப்பு குறைவாக இருந்தால் உங்களுக்கு எந்த அபராதமும் ஏற்படாது.

பெண்கள் சேமிப்பு கணக்கு:

சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கௌன்ட்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இது பெண்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட சிறப்பு வங்கி கணக்குகள் ஆகும். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. 

பெண்களுக்கு கடன்களுக்கு குறைந்த வட்டி, டிமேட் கணக்கை தொடங்க இலவச கட்டடம் மற்றும் பல்வேறு வகையான கொள்முதல் மீதான தள்ளுபடிகள் என அனைத்தும் வழங்கப் படுகின்றன.

நடப்பு கணக்கு (current account):

சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் கரண்ட் அக்கௌன்ட்... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நடப்புக் கணக்கு என்பது முக்கியமாக வர்த்தகர்கள், நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள், பொது வணிக ஸ்தாபனங்கள் ஆகியோர் பயன்படுத்துவது. 

இந்த நடப்பு கணக்கில் தினம்தோறும் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும். அதாவது பெரிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தினந்தோறும் பண பரிவர்த்தனைகள் ஈடுபடுவார்கள்.

அவர்களுக்கான கணக்கு தான் நடப்பு கணக்கு. இந்த கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது. அதனைப் போலவே பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவித எண்ணிக்கை வரையறையும் கிடையாது. 

சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி?

நீங்கள் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கும் போது, ஊதிய கணக்கு அல்லது ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் சேமிப்பு கணக்கையே தேர்வு செய்ய வேண்டும். 

இதுவே சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்குக்கான வித்தியாசம். இனிமேல் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கச் செல்லும் போது இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் மட்டும் இதனை தெரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த தகவலை கூறுங்கள். பெரும்பாலானோர் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கும் போது அதில் நடப்பு கணக்கை தேர்வு செய்வார்கள். 

அது தவறானது சாதாரண மக்கள் அனைவரும் வைத்திருப்பது சேமிப்பு கணக்கு தான் என்பதை இந்த பதிவு மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings