பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தலைமுடியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் அவர்களது அழகை மேம்படுத்துவதில் கூந்தலுக்கு (ஹேர் ஸ்டைல்) தான் முதல் இடத்தை கொடுக்கின்றன.
ஹீமோபீலியா என்கிற ரத்தம் உறையாமை நோய் !
ஆனால் கூந்தலை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான வேலையாகும்.
இப்போது இருக்கின்ற அவசர உலகத்தில் போதிய நேரம் ஒதுக்க முடியாமல் முடி கொட்டும் பிரச்சனையை சந்திக்கின்றன.
இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக்கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் இப்போது அதிகரித்து விட்டன.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால், முகத்தை அழகாகக் காட்டுவதில் சிகை அலங்காரத்துக்கும் பங்குண்டு.
தலைமுடியில் விதவிதமான அலங்காரம் காட்ட பெண்களுக்குப் பல வழிகள் உள்ளன.
ஆனால், ஒரே வகையில் தலைமுடியை வாரிக்கொள்ளும் ஆண்களுக்கு வித விதமாகச் சிகை அலங்காரம் செய்து கொள்ள வழி இல்லை என்று நினைத்து விடாதீர்கள்.
அப்படி ஒரு வித்தியாசமான சிகை அலங்காரம் தான் தற்சமயம் வைரலாகி வருகிறது. ஒரு நபருக்கு தலையில் முடி வெட்டப்பட்டுள்ளது.
கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட அற்புத வழி !
வித்தியாசமாக முடி வெட்டுவது என்றால் தலையில் நடுவில் மட்டும் முடி விட்டு சுற்றி வெட்டுவது இப்படி பல முறைகளை பார்த்திருப்போம்.
ஆனால் லையில் 'குதிரை' போல சிகை அலங்காரம் செய்து கேள்விப்பட்டுள்ளீர்களா.
ஆமாம். ஒரு பென்சிலை கொண்டு படம் வரைபவர்கள் குதிரையை வரைந்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே ஒரு மனிதரின் தலையில் தலைமுடியை கொண்டே சிகை அலங்காரம் செய்திருக்கிறார் முடித்திருத்துபவர்.
அதில் குதிரையை உயிர்ப்போடு காட்டுவதற்காக அதன் பிடரி முடிகள் மற்றும் வாலில் உள்ள முடிகள் ஆகியவை விடப்பட்டுள்ளன.
முடியை வெட்டியவர் பிடரிக்கும், வாலுக்கும் அந்த நபரின் தலைமுடியையே பயன்படுத்தியுள்ளார். அவர் அதற்கு தகுந்தாற் போல முடியை வெட்டியுள்ளார்.
மேலும் அது பார்ப்பதற்கு மிகவும் உண்மைத் தன்மையுடன் இருக்கிறது. அவர் அந்த வீடியோவில் குதிரையின் பிடரி முடி மற்றும் வால் முடியை அசைத்து காட்டுவதை பார்க்கலாம்.
சிந்தித்து நடக்க ஒரு உண்மைச் சம்பவம் !
அது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.
இப்படியும் ஒரு மனிதனால் செய்ய முடியுமா? ஏன் இந்த மனிதர் இன்னும் தனது திறமையை பயன்படுத்தி உலக சாதனை விருதை வாங்காமல் இருக்கிறார். என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
சிலர் இதற்கு எதிராகவும் பேசி வருகின்றனர். அதை பார்க்கவே பயமாக இருக்கிறது என கருத்து பதிவு செய்துள்ளனர்.
ஆனால் முடி திருத்துதல், சிகை அலங்காரம் என்பது புதிய புதிய முன்னேற்றங்களை கண்டு வருகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
Thanks for Your Comments