தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் துணிந்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே.
கடந்த 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே.
நமக்கே தெரியாமல் பின்பற்றும் சில பழக்கம் !
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் படத்தில் நடித்து பிரபலமானார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை களங்களை தேர்வு செய்து நடிக்கும் ராதிகா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், தான் ஒல்லியாக இருப்பதால் பல்வேறு விதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாகவும் தன்னுடைய நல விரும்பிகள்
தனது உடலில் சில மாற்றங்கள் செய்ய அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியதாகவும், ஆனால் அந்த அறிவுரைகள் தன்னை மிகவும் கோபப்படுத்தியதாகவும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய உடலிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டேன். எனது மூக்கை சரி செய்யவும்,
மார்பகத்தை பெரிதாக்கவும் ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பலர் அறிவுரை கூறினார்கள் என்றும் கூறியுள்ளார்.
இயர்பட்ஸ் வைத்து காது குடையலாமா?
மேலும், என்னுடைய நடிப்புத் திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு அறுவை சிகிச்சை செய்தால் தான் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks for Your Comments