கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

0

இணையத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கிரிப்டோகரன்சி புழக்கத்தில் உள்ளது. அதற்கு தான் தற்போது அதிக மதிப்பு. கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா? 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

அதன் மதிப்பு என்ன? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பண நோட்டு, சில்லறைகள், டாலர்கள், யூரோக்கள் ஆகியவற்றை கரன்சி என்று நாம் கூறலாம். 

இவை அனைத்திற்கும் வடிவம் உண்டு. இவற்றை நாம் கண்களால் பார்க்க, கைகளால் கொடுத்து வாங்க முடியும். இவை அனைத்திற்கும் மாற்றானது தான் கிரிப்டோகரன்சி. 

Crypto என்றால் மறைமுகம், currency என்றால் பணம், மறைமுக பணம் தான் இந்த கிரிப்டோகரன்சி. இது முற்றிலும் டிஜிட்டல் மயமானது. இதனை உங்கள் கண்களால் பார்க்கவோ, தொடவோ முடியாது.

கொலஸ்ட்ரால் என்பது என்ன? நம் உடல் எங்கிருந்து பெறுகிறது?

இவை அனைத்தும் இணையத்தில் உள்ள வாலட்களில் என் வடிவத்தில் இருக்கும். இணைய வர்த்தகங்களில் மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

கிரிப்டோகரன்சி என்றாலே மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பிட்காயின் (bitcoin). இது 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto). 

ஆனால் இதுவரை அப்படிப்பட்ட நபர் யார் என்று தெரியவில்லை. இதனை உருவாக்கியவர் தனிநபரா அல்லது குழுவா என்றும் கண்டறியப்படவில்லை. டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சி இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

கூகுள் பே, போன் பே ஆகியவற்றை நாம் டிஜிட்டல் கரன்சி என்கிறோம். இதன் மூலமாக நாம் அனுப்பும் பணம் இந்திய ரூபாய் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். 

நாம் அனுப்பும் நம்பர் எல்லாம் இந்தியன் ரூபாயாக கணக்கிடப்படும். அது மட்டுமல்லாமல் நம்முடைய வங்கிக் கணக்கு அதில் இணைக்கப்பட்டிருக்கும். 

அதனால் நாம் யாருக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறோம் என்ற விவரங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு சென்றடையும். கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் அனைத்தும் தனி டெக்னாலஜி. 

இதில் அனைவருக்கும் தனியாக private key ஒன்று இருக்கும். அதனால் ஒருவர் யாருக்கு பணம் அனுப்புகிறார் என்பதை கண்டறிய முடியாது. 

ஆனால் எந்த ஐடியில் இருந்து எந்த ஐடிக்கு பணம் சென்றுள்ளது என்பதை மற்றும் பார்க்க முடியும். இவை அனைத்துமே Block Chain என்ற டெக்னாலஜி மூலமாக block block ஆக சேமிக்கப்படும். 

அதனால் இதனை யாரும் ஹேக் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்கள் மட்டுமே. 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

ஆனால் தற்போது ஒரு பிட்காயின் விலை 10 ஆயிரம் டாலர்களை தாண்டி நிற்கிறது. மக்கள் இதனை வரவேற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இதனை யாராலும் கணிக்க முடியாது. 

அதனால் இதற்கு வருமான வரி என்பது அவசியமில்லை. அதனால்தான் தற்போது நிறுவனங்கள்கூட பிட்காயின்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டன. இணையத்தில் பல கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ளது. 

ஆனால் இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவற்றை வாங்குவது என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றது தான்.

ஆடி மாதத்தில் ஆடி தேங்காய் பால் செய்வது எப்படி?

எப்போது இதன் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் குறைய ஆரம்பிக்க தொடங்குகிறதோ அப்போது தான் அதன் மதிப்பு குறைந்து போகும். தற்போது ஒரு பிட்காயின் விலை 40 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. 

இதனை சாதாரண மக்கள் வாங்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்?. 

அவ்வளவு மதிப்பு கொடுத்து நம்மால் வாங்க முடியவில்லை என்றாலும், உங்களிடம் உள்ள சிறிய தொகையை கொடுத்து அதனை பிரித்து வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு பிட்காயின் என்பது 10,00,00,000 Satoshi. இந்த பிட்காயினை கண்டுபிடித்தவர் பெயரை வைத்தே இதன் அளவை குறிப்பிடுகின்றனர். அதன்படி 43 பைசாவுக்கு 1000 Satoshi வாங்கிக் கொள்ளலாம். 

40 லட்சம் கொடுத்து ஒரு பிட்காயினை உங்களால் வாங்க முடியவில்லை என்றாலும், அதில் ஒரு பங்கை கொடுத்து பிரித்து வாங்கிக் கொள்ளலாம். 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நாடுகளில் பல புதிய நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கிரிப்டோ நாணயங்களால் பல சிக்கல்களும் உருவாகி இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக இதனை வைத்து நடத்தப்படும் சட்டத்திற்குப் புறம்பான பண பரிமாற்றங்கள், பிட் காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது 

மற்றும் ஹேக்கர்களால் பிட்காயின் திருடப்படுவது ஆகியன இவற்றுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். 

இந்த பிட்காயினை பயன்படுத்தி சில நாடுகளில் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள Tesla நிறுவனத்தில் கார் வாங்குவதற்கு பிட்காயின் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

ஹைடெக் ஏமாற்று வேலையிலிருந்து தற்காத்துக் கொள்ளுவது எப்படி?

இந்த டெக்னாலஜியை போதைப் பொருட்கள் வாங்குவதற்கும், தீவிரவாதத்திற்கும் பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கருதி 

இந்த கிரிப்டோகரன்சி ஒழுங்குபடுத்த தற்போது மத்திய அரசு புதிய சட்ட மசோதா கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் பிரைவேட் கிரிப்டோகரன்சி என்று சொல்லப்படுகின்ற கிரிப்டோகரன்சி அனைத்தையும் தடை செய்து விட்டு பிட்காயின் மாதிரி இந்தியாவிற்கு தனியாக டிஜிட்டல் கரன்சி கொண்டு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அது குறித்த விவரங்கள் அனைத்தும் சட்டமசோதா வெளியிடப்பட்ட பிறகே நமக்கு தெரிய வரும். 

இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் இந்த பிட்காயின் விலை எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 

கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா?

ஆனால் தற்போது இதன் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் குறைந்த பணத்தில் அதிக முதலீடு செய்து தருவதாக கூறி உங்களிடம் ஏமாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே இதனையெல்லாம் கருத்தில் கொண்டு பிட்காயின் வாங்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். 

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !

அப்படி வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் சேமித்து வைத்த அனைத்து பணத்தையும் அதில் முதலீடு செய்யாமல், ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதே நல்லது. 

இதுவே பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings