க்யூஆர் குறியீடு முறையில் ரயில் டிக்கெட் பெறும் திட்டம்... சென்னை மெட்ரோ !

0

மெட்ரோ ரயில் பயண டிக்கெட் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக டிக்கெட்டுகளை பெறும் வகையில் 

க்யூஆர் குறியீடு முறையில் ரயில் டிக்கெட் பெறும் திட்டம்... சென்னை மெட்ரோ !

க்யூஆர் குறியீடு முறையில் டிக்கெட் பெறும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி வரிசைகள் இல்லை, க்யூஆர் மட்டுமே என்ற புதிய முறையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், மெட்ரோ ரயிலில் பயணிக்க, பயணிகள் ரயில் நிலையங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை 

ஆடிப்பெருக்கு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன?

ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு வழங்கும் பக்கத்திற்குச் செல்லலாம். 

பின்பு இந்த பக்கத்தில், பயணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ ரயில் நிலையத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வகையில் யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயண கட்டணத்தைச் செலுத்த முடியும். 

க்யூஆர் குறியீடு முறையில் டிக்கெட் பெறும் திட்டம்... சென்னை மெட்ரோ !

ஆண்ட்ராய்டு செல்போனில் யுபிஐ முறையைத் தேர்வு செய்தால், செல்போனில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து யுபிஐ செயலிகளும் வரிசைப் படுத்தப்படும்.

சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

இவற்றிலிருந்து ஏதேனும் ஒரு முறையைப் பயணிகள் தேர்வு செய்து, பாஸ்வேர்டை பதிவிட வேண்டும். இதன் மூலம் க்யூஆர் டிக்கெட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியும். 

தற்போது செல்போன் க்யூஆர் டிக்கெட்டில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings