சில வருடங்களுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில் தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது.
வயது முதிர்ந்த மனிதர்கள் கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று வருவார்கள்.
பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது.
விந்தணு அதிகரித்து யானை பலம் கொடுக்கும் உணவுகள்? சில டிப்ஸ் !
சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள்
சைக்கிள் ஓட்டும் போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.
டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.
சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
நீங்கள் பொது சாலைகளில் சைக்கிளில் செல்வோர் கவனத்திற்கு :
10 மீட்டர் தூரத்திற்கு நேராக சைக்கிளில் ஓட்ட முடிய வேண்டும். கீழே விழாமல் திடீரென சைக்கிளை நிறுத்த முடிய வேண்டும். சைக்கிளில் செல்லும் போது ஒரு கையால் போக்குவரத்து வாகன சைகையை காட்ட இயல வேண்டும்.
உங்கள் தோள்களை ஒட்டி தலையை திருப்பி பின்னால் வரும் வாகனத்தை கவனிக்கவும், வலதுபுறம் திரும்பவும் முடிய வேண்டும்.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் !
பொதுச்சாலைகளில் சைக்கிளில் செல்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை :
சக்கரங்கள், பெடல் மற்றும் போக்கஸ் ஆகியவற்றில் பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும். இரு சக்கரங்களிலும் பிரேக் சரியாக பிடிக்கிறதா என சரிபார்த்தல் வேண்டும்.
சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மணி ஒலிக்கின்றதா என சரிபார்க்க வேண்டும். சைக்கிள் ஓட்டியின் இருக்கை, அவர் கால்கள் நிலத்தில் ஊன்றுமளவிற்கு பொருத்தப்பட வேண்டும்.
பொதுச்சாலையில் செல்லும் பொழுது :
சைக்கிள் ஓட்டுபவர்கள் அணிய வேண்டிய தலைக்கவசம் அணிய வேண்டும். சைக்கிள் செயினிலோ அல்லது சக்கரங்களிலோ மாட்டும் படியான ஆடைகள் அணியக்கூடாது.
மங்கலான ஒளி அல்லது இரவு நேரத்தில் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் மெல்லிய நிறங்களிலோ அல்லது பிரகாசமான நிறங்களிலோ உடைகள் அணிந்திருத்தல் வேண்டும்.
ஒளியை பிரதிபலிக்கும் உடைகள், மணிக்கட்டு, பெல்ட் போன்றவற்றை அணிய வேண்டும்.
வயதானாலும் நம்மை இளமையாக வைத்திருக்கும் கொலாஜன் !
கடைபிடிக்க வேண்டிய விதிகள் :
போக்குவரத்து சைகைகள் காட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு கையில் வாகனத்தை ஓட்டக்கூடாது. இரு கால்களையும் பெடல்களில் வைத்து சைக்கிளை செலுத்த வேண்டும்.
இருவருக்கு மேலே சைக்கிளில் செல்லக்கூடாது. சைக்கிளுக்கென்று தனிவழி இருந்தால் அதில் மட்டுமே செல்ல வேண்டும்.
போதிய பாதுகாப்பான இடைவெளி விட்டு வாகனத்தை தொடர்ந்து செல்ல வேண்டும். சமநிலை கெடும் வகையில் சைக்கிளில் பாரம் ஏற்றி செல்லக்கூடாது.
சைக்கிளில் மினுமினுக்கும் ரிப்லெக்டர் அல்லது ஸ்டிக்கர் பின்புறம் ஒட்டுவதால் இரவில் விபத்தைத் தவிர்க்கலாம். இரவில் சைக்கிளில் லைட் இருப்பது அவசியம்.
சைக்கிளில் செல்லும் போது ஒருவர் பின் ஒருவராகச் செல்லவும். இரண்டு, மூன்று சைக்கிள்கள் பக்கத்து பக்கத்தில் செல்வதால் மற்ற போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.
மாட்டு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
நெரிசலான சாலையில் சைக்கிளில் குறுக்கே கடக்கும் போது சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சைக்கிளைத் தள்ளிச் சென்று கடக்கவும்.
பெரிய, பரபரப்பான சாலைகளில் சைக்கிளில் செல்ல வேண்டாம். பிற வாகனங்கள் போல சாலைகளில் இடது புறம் செல்ல வேண்டும்.
கார் போன்ற வாகனங்கள் நிறுத்தியிருந்தால் நிதானித்து கடந்து செல்ல வேண்டும். பிற வாகனங்கள் போல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
சாலைகளின் வலதுபுறத்தில் திரும்பும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் கடந்த பிறகு திரும்பவும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் சைக்கிளை நிறுத்தக் கூடாது.
நடைபாதைகளில் சைக்கிள் ஓட்டக்கூடாது. பிற வாகனங்கள் திரும்பும் பொழுதும் அனுமதியின்றி முந்தி செல்லக்கூடாது.
ஒருவழிப்பாதையில் செல்லக்கூடாது. சாலைகளில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் செய்யும் போக்குவரத்து சைகைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டியவை :
கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாகனம் ஓட்டும் போது பொறாமை இருக்கக் கூடாது. நடுரோட்டில் வாகனம் ஓட்டிச்செல்ல கூடாது. பிரேக் பிடித்தால் நிற்கும் தூரம் அறிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.
பகலில் வாகன விளக்கை எரிய விடக்கூடாது. வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
இனி நெடுஞ்சாலைகளில் டிராக்... இதுக்கு எவ்வளவு கட்டணமோ தெரில !
உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி விட்டு, பிறகு உங்களின் வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்திச் செல்லுங்கள்.
உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் ஒலி எழுப்பினால் அவர்களுக்கு வழிவிட வேண்டும்.
சாலையில் செல்லும் போது சிக்னல் விழுந்தால் உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விட நேரிடும்.
உங்கள் வாகனத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்காமல் இடது புறமோ அல்லது வலதுபுறமோ திரும்ப கூடாது.
சாலைச் சந்திப்பு, சாலையில் நடந்து செல்பவர்கள் கடந்து செல்லும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், போக்குவரத்து போன்ற நெருக்கடியான இடங்களில் இரு சக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் ஒட்டிச் செல்ல வேண்டும்.
சாலைக் குறுக்கீட்டையோ, சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனத்தில் பின்புறம் உட்கார்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது.
இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாவிடில் விபத்து ஏற்படும் போது தலையில் அடிபடும். தலையில் அடிபட்டால் உயிருக்கு அபாயம் நேரிட அதிக வாய்ப்புள்ளது.
இரண்டு சக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லக்கூடாது.
அதிக பாரம் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் லோடு எடுத்துச் செல்வது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும்.
வாகனம் ஓட்டும் போது திரும்பி பேசுதல், செல்போனில் பேசுதல் போன்ற கவன குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
பச்சை விளக்கு சிக்னல் வந்த பிறகே வாகனத்தை நகர்த்த வேண்டும். மஞ்சள் விளக்கு சிக்னல் ஒளிர்ந்தால், சந்திப்பைக் கடக்க முயற்சி செய்யக் கூடாது.
தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.
பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை !
வாகன ஓட்டுநர்கள் U திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.
மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.
Thanks for Your Comments