இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

0

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவு, உடற்பயிற்சி செய்வதால், அமைதியான மனநிலையை உருவாக்கும் 

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

நியூரோ டிரான்ஸ் மீட்டர் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் நியூரான் செல்கள் புதிதாக உருவாவதாக சொல்கிறது.    

உடற்பயிற்சிகளின் போது, மூளை உற்பத்தி செய்யும் நரம்புகளை தூண்டும் சில ரசாயனங்கள், வலி மற்றும் மனச்சோர்வு உணர்வை தற்காலிகமாக நிறுத்துவதும் தெரிய வந்துள்ளது. 

நீங்கள் நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் நபராக இருந்தால் கூட சில சமயங்களில் உடலானது அதற்கு ஒத்து வராது. 

மிகையான உடற்பயிற்சிகள் சில தீவிர சிக்கல்களுக்கும் நீண்ட கால தாக்கங்களுக்கும் வழிவகுக்கும்.

லஸ்ஸி குடிப்பது ஆரோக்கியம் தருமா? என்ன நன்மைகள் தரும்?

சில சமயங்களில் உடற்பயிற்சி செய்யும் களைப்பை பெறுவீர்கள் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அதே மாதிரி அதிகப்படியான உடற்பயிற்சி உங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். 

எனவே அந்த மாதிரியான சமயங்களில் உடற்பயிற்சி செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

​உடற்பயிற்சி வேண்டாம்

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் அழுத்தமாக உணர்ந்தால் அன்றைக்கு உடற்பயிற்சி செய்யாதீர்கள். எனவே அது உங்க உடம்பு ஒத்து வரவில்லை என்பதை காட்டுகிறது. 

உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்க கூடிய விஷயம் என்றால் கூட மன அழுத்தம் இருக்கும் சமயங்களில்

உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்க உடற்பயிற்சியை குறைப்பது நல்லது.

​தூக்கமின்மை பிரச்சினைகள்

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

உங்கள் உடலுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமே அதே போல் தூக்கமும் அவசியம். எனவே நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் சோர்வாக உணர்வீர்கள். 

இது உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் திறனை குறைக்கும். நீங்கள் தூக்கமின்மையுடன் இருந்தால் உங்க உடலானது ஒத்து வராது. 

குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்வது எப்படி?

அந்த சமயத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அது அதிக காயத்திற்கு வழி வகுக்கும். எனவே சரியாக தூங்கின பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள்.

​காய்ச்சல்

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது உடம்பு பலவீனமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாது. 

கழுத்துக்கு கீழே வலி இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள் உடற்பயிற்சியாளர்கள். 

அதே மாதிரி காய்ச்சல் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு அதிக நீரிழப்பை ஏற்படுத்தும்.

​காயங்கள் ஏற்படுதல்

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

ஒரு தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடற்பயிற்சி செய்த பிறகு உங்களுக்கு வேதனைகள் இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. 

தசை புண் அல்லது தசை பலவீனமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிருங்கள். இது உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

உங்க உடல் குணமடைய அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். 

பாயில்ட் எக் சாண்ட்விச் செய்வது எப்படி?

ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்.?

இந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

வொர்க்அவுட்களில் இருந்து சிறந்த பலன்களை பெற ஒருவர் நிலைத் தன்மையை பராமரிக்க வேண்டும். 

உடற்பயிற்சிக்கும் ஓய்வெடுக்கும் நேரத்திற்கும் இடையில் சமநிலையையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

ஃபிட்டாக இருப்பது மட்டுமே உங்களுடைய இலக்கு என்றால் வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சி செய்தாலே போதும். 

கார்டியோ மற்றும் வலிமை பயிற்சிகளை (strength training) தனித்தனி நாட்களில் பிரித்து செய்யலாம். 

அதே போல ஒருவர் தனது உடற்பயிற்சியின் அளவை பொறுத்து, வாரத்தில்1 அல்லது 2 நாட்கள் ஓய்வெடுக்கலாம். 

வொர்க் அவுட்டானது அட்வான்ஸ்டு லெவல் மற்றும் தீவிரமானதாக இருந்தால், 2 நாட்கள் ஓய்வு அவசியம் இல்லையெனில் 1 நாள் ஓய்வு போதுமானது.

முடிவுஇந்த அறிகுறி இருந்தா உடற்பயிற்சி செய்யாதீங்க !

ஆரோக்கியமாக இருக்க மற்றும் நீண்ட நாள் வாழ சந்தேகத்திற்கு இடமின்றி உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். 

எடையை நிர்வகிக்க, உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த, எலும்பு முறிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடற்பயிற்சிகள் உதவுகின்றன. 

முட்டை கொத்து பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா செய்வது எப்படி?

ஆனால் வாரத்தின், மாதத்தின் மற்றும் ஆண்டின் எல்லா நாட்களும் அதாவது 365 நாட்களும் ஒருவர் தீவிர உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது இல்லை. 

குறிப்பாக நீங்கள் தீவிரமான வொர்க்அவுட்டை தவறாமல் பின்பற்றுபவர் என்றால், மற்ற செயல்பாடுகளைப் போலவே நீங்கள் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings