கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள் !

0
உடல் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை முக்கியமானவை. 
கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள் !
இதில் கார்போ ஹைட்ரேட் எனும் மாவுச்சத்து உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. 

இது தினமும் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் முதல் பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் வரை அனைத்திலும் உள்ளது. 

கார்போஹைட்ரேட் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் பல்வேறு செல்கள் மற்றும் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது. 
செல்கள் இதன் மூலமாகவே உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது. கார்போ ஹைட்ரேட்டில் எளிமையானது, சிக்கலானது என இரண்டு வகைகள் உள்ளது. 

எளிமையான கார்போஹைட்ரேட் எளிதில் செரிக்கப்பட்டு உடலில் உறிஞ்சப்படுகிறது. பசியினால் சோர்வாக இருக்கும் போது இந்த எளிமையான கார்போ ஹைட்ரேட் உணவைத் தான் சாப்பிடுகிறோம். 

இது உடலுக்கு விரைவான சக்தியைக் கொடுக்கிறது. மேலும், எளிமையான கார்போ ஹைட்ரேட் உணவுகள் ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். 

இவை சோடா, பிஸ்கட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்றவற்றில் இருக்கும். 

இவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு, பதற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவை உண்டாகும். 
சிக்கலான கார்போ ஹைட்ரேட்டை உடல் கிரகித்துக் கொள்ள நீண்ட நேரம் ஆகும். இது முழு கோதுமை ரொட்டி, தானியம், சோளம், ஓட்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்றவற்றில் உள்ளது. 
கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள் !
இவை உடலுக்கு நன்மை தரும். உடல் உழைப்புக்கு ஏற்றபடி, தனி நபருக்கான கார்போ ஹைட்ரேட்டின் அளவும், தேவையும் மாறுபடும். 

எனினும், தோராயமாக ஒரு நாளுக்கு 225 முதல் 325 கிராம் வரை கார்போ ஹைட்ரேட் ஊட்டச்சத்து உடலுக்குத் தேவைப்படும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  
உடலின் தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் கார்போ ஹைட்ரேட்டின் அளவை, உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகள்:

1. அரிசி

2. கோதுமை

3. சோளம்

4. மக்காச் சோளம்

5. நவதானி யங்கள்

6. உருளைக் கிழங்கு

7. மரவள்ளிக் கிழங்கு

8. கேரட்

9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு

10. இனிப்பு வகைகள்.

சர்க்கரை என்பதும் ஒரு வகை கார்போ ஹைட்ரேட் தான். ஆனால், இதில் நூறு சதவீதம் கார்போஹைட்ரேட் இருப்பதாலும், இது உடனடியாக இரத்த த்தில் கலப்பதாலும் ஆபத்தானது.

நம் உடலில் உள்ள நரம்புகளில் நடப்பது என்ன?

எல்லா வகை இனிப்பு வகையிலும், குளிர் பானத்திலும், ஏன் நாம் உண்ணும் மருந்திலும் (மேல் பகுதியிலும்) கூட சர்க்கரை உள்ளதால், இது பல வழிகளில் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது.

சர்க்கரையை முற்றிலும் புறக்கணித்து, பிற கார்போ ஹைட்ரேட் களை நாட வேண்டும்.
கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள் !
தீட்டப் படாத அரிசி, கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, மக்காச் சோளம், ராகி, கம்பு ஆகியவையும், கிழங்கு வகைகளும் ஆரோக்கிய மான கார்போ ஹைட்ரேட்கள் ஆகும்.

இவற்றில் 60-70 சதவீதம் கார்போ ஹைட்ரேட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டீன் மற்றும் மிகச்சிறிய அளவு கொழுப்பும் உள்ளது.

நமக்குத் தேவைப் படும் கலோரிகளில் 65 சதவீதம் கார்போ ஹைட்ரேட்க ளிலிருந்து வருதல் வேண்டும். 1 கிலோ கார்போ ஹைட்ரேட் 4 கலோரி களைத் தருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings