உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவது தான் பிகா சிண்ட்ரோம்.
ஊட்டச்சத்து இல்லாத பொருள்கள் எனும் போது பேப்பர், மண், கற்கள், க்ரேயான்ஸ், துணி, ரப்பர் பேண்ட், பட்டன் இது மாதிரியான பொருள்களும் அடங்கும்.
சிறிய வயதில் நம்மில் பலர் சிலேட் குச்சிகளைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் இதே பிரச்னை தான். இந்தப் பிரச்னை குறிப்பாக குழந்தைகளிடமும், கர்பிணிகளிடமும் தான் அதிகமாகக் காணப்படுகிறது.
பை என்று பொருள்படும் பிகா என்ற லத்தீன் பெயரிலிருந்து பெறப்பட்டது இந்த நோய். ஒரு நபர் ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக உணவில்லாத பொருட்களை தவறாமல் சாப்பிட்டால் அது Pica என கண்டறியப்படுகிறது.
மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தால் நல்லதா?
இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் என ஏதோ ஒரு சத்துக் குறைபாட்டின் காரணமாகவே கண்ட பொருள்களையும் சாப்பிடத் தோன்றும். இந்தப் பழக்கம் ஆண்கள், பெண்கள் என யாருக்கும் வரலாம்.
குறிப்பாக ஆட்டிசம் குறைபாடும், அறிவாற்றல் சவாலும் உள்ள குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படும். PICA என்பது தற்போது மனநல குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யும் ஓசிடி (obsessive-compulsive disorder) பாதிப்பு, ஸ்கீஸோபெர்னியா போன்ற பாதிப்புகள் PICA-வுக்கு காரணமாகலாம்.
இது உணவு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் எந்த வகையான உணவுப் பொருள் சாப்பிடுகிறார்களோ அதை வைத்து உடல் பாதிப்புகள் வேறுபடும்.
பேப்பர், மண், மரத்தூள் போன்றவற்றைச் சாப்பிட்டால் பெரிய ஆபத்து ஏற்படாது என்றாலும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
சிலர் பெயின்ட், பசை போன்ற அதிக ரசாயனங்கள் நிறைந்த பொருளையோ ஊசி, ஊக்கு மாதிரி கூர்மையான பொருள்களையோ சாப்பிட்டால் ஆபத்து தான்.
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் !
வாயில் காயம் ஏற்படுவது, உணவுக்குழாயில் அடைப்பு, செரிமானக் கோளாறுகள், வாந்தி, குடல்களில் அடைப்பு எனப் பல வகை பாதிப்புகள் ஏற்படும்.
இது போன்ற ஆபத்தான பொருள்களைச் சாப்பிடுவதால் அரிதாக மரணம் கூட ஏற்படலாம்.
பெற்றோரின் பிரிவு, புறக்கணிப்பு, குழந்தைப்பருவ வன்முறை, சிதறிய குடும்பச் சூழல், பெற்றோர்- குழந்தைகளுக்கு இடையில் சுமுக உறவின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்கூட, PICA பாதிக்க காரணங்களாகலாம்.
உடலியல் ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம்.
இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.
சிகிச்சைகள் உண்டா?
மனநலம் குன்றியவர்கள் மற்றும் சிலவகை மனநோய்களால் பாதிக்கப் பட்டவர்களிடமும் காணப்படலாம். இரும்புச்சத்து, ஸிங்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தான் இந்தப் பிரச்னைக்கான முக்கியமான காரணம்.
குழந்தைகள் மண்ணைத் திண்பதும் ஊட்டச்சத்து குறைபாடு தான். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பட்சத்தில் போதுமான ஊட்டச்சத்து கொடுத்தாலே பிரச்னை சரியாகிடும்.
மனநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்தப் பிரச்னை நீண்ட நாள் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும்.
உதாரணத்துக்கு... குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும்.
இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.
ஆனால், உரிய மருத்துவ ஆலோசனையும் கண்காணிப்பும் இருந்தாலே எளிதாகக் குணப்படுத்தி விடலாம்.
பொது சாலைகளில் சைக்கிளில் செல்வோர் கவனத்திற்கு !
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை மனநல மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர்கூட எளிதாகச் சரி செய்து விடுவார்கள்.
இது போன்ற பழக்கம் உள்ள குழந்தைகளை பெற்றோர் அடிக்காமல், திட்டாமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
Thanks for Your Comments