ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?

0

PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. 

ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?

ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்ச் 31, 2022 க்குள் இணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.  

அதே சமயம், நீங்கள் மார்ச் 31, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.  

ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்?

தற்போது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மார்ச் 31, 2023 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அபராத தொகை செலுத்த வேண்டும். அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டு விடும். 

இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, 

ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. 

வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதைப் பற்றிய பொதுவான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன. அந்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பான் மற்றும் ஆதார் எண் இணைப்பதைப் பற்றி பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

யாரெல்லாம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும்?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA கீழ், ஜூலை 1, 2017 அன்று PAN ஒதுக்கப்பட்ட அனைத்து நபர்களும், 

ஆதார் எண்ணைப் பெறத் தகுதி யுடையவர்களும் அல்லது ஆதார் எண்ணைப் பெற்றவர்களும், தங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? தெரிந்து கொள்ளூங்கள் !

யாருக்கெல்லாம் பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை?

தற்போதைய வருமான வரிச் சட்டப்படி நாட்டில் குடியுரிமை இல்லாதவர்கள், முந்தைய ஆண்டில் 80 வயதை அடைந்தவர்கள் அல்லது அதை விட அதிக வயதானவர்கள், 

இந்தியக் குடிமகனாக அல்லாதவர் மற்றும் மேகாலயா, அசாம், மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆகியோர் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம். 

இந்த விதிவிலக்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

என்னுடைய ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது

நீங்கள் வருமான வரி ஆன்லைன் ஃபைலிங் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருந்தால் அல்லது 

இது இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், இ-ஃபைலிங் முகப்புப் பக்கத்தில் ஆதார் மற்றும் பான் இணைக்கும் லிங்க்கைப் பயன்படுத்தலாம்.

என்னுடைய ஆதார் மற்றும் பான் கார்டை நான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?

உங்கள் பான் அட்டை செல்லுபடியாகாமல் போய் விடும். இது மட்டுமல்லாமல் நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை நீங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செல்லாமல் போய்விடும். 

இதன் விளைவாக உங்கள் ஊதியம் பெறுவது, நீங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்றவை பாதிக்கப்படலாம். 

ஆகவே, அபராதம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றால் ஆதார் மற்றும் பான் அட்டைகளை நீங்கள் உடனே இணைத்தாக வேண்டும்.

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கும் போது பெயர்/ முகவரி/ மொபைல் எண் mismatch என்ற பிழை வருகிறது

நீங்கள் ஆதார் அல்லது பான் அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்த வேண்டும். இரண்டு அட்டைகளிலும் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒரே மாதிரி இருந்தால் தான் பிழை வராது. 

பான் கார்டு விவரங்களைத் திருத்த, TIN-NSDL இணையத்தளம், அல்லது UTIITSL's PAN ஆன்லைன் தளத்தில் பதிவு செய்யலாம். ஆதார் கார்டைத் திருத்த, ஆதார் இணையத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

இயர்பட்ஸ் வைத்து காது குடையலாமா?

ஆஃப்லைனில் என்னால் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முடியுமா?

SMS வழியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து இணைக்கலாம். 

உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள்.

UIDPAN <12digitaadhaar> <10digitpan> - இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுவிடும்.

என்னுடைய பான் கார்டு செயலிழந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் மற்றும் பான் கார்டை எவ்வாறு இணைப்பது?

உங்கள் பான் கார்டை குறிப்பிட்ட தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். 

அந்தக் காலக்கெடுவுக்குள் உங்களால் இணைக்க முடியவில்லை என்றால், கார்டு செயலிழந்து விடும். நீங்கள் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய, ஆதாருடன் இணைக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings