பாலில் சுத்தமான தண்ணீர் தவிர வேறு எதையும் நம்மால் கலக்க முடியாது. அப்படி வேறு ஏதாவது கலந்தால் பால் திரிந்து விடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பாலை ஒரு கண்ணாடியின் மீது எடுத்து விட்டால் அது வழிந்து ஓடும். வழிந்து ஓடும் இடத்தில் தாரை உண்டாகும். ஆனால் ஸ்டார்ச் மாவை கலந்திருந்தால் அது அங்கேயே தேங்கி நிற்கும்.
அதை வைத்து நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பால் கெடாமல் இருக்க காஸ்டிக் சோடா, ஹைட்ரஜன் பொராக்சைடு, பார்மலின் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
அதை கண்டுபிடிக்க ஒரு சிறிய கண்ணாடி டியூபில் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் அளவுக்கு அளவுக்கு சோயா மாவை போட்டு கலந்து நன்கு குலுக்கவும்.
இந்த கலவையை நீல வண்ண லிட்மஸ் பேப்பர் மீது சில துளிகள் விட்டதும் அந்த பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால் அந்த பாலில் யூரியா கலந்திருக்கிறது என்பது பொருள்.
விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது என்ன?
பாலில் 10 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலக்கவும். அதன் மேற்பகுதியில் லேசாக நுரை போல படிந்தால் அதில் நிச்சயம் சோப்பு கலந்திருக்கிறது என்பது பொருள்.
Thanks for Your Comments