இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் தனியாக ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.
அதில் தனிநபர் விவரங்கள் அடங்கியிருக்கும். ஆதார் கார்டில் நிறைய சலுகைகள் உள்ளன.
ஆதார் கார்டை பான் கார்டு, ரேஷன் கார்டு, சிம் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் முதல் அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் மொபைல் நம்பர் என்பது மிகவும் அவசியம். அதனை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.
ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !
ஆதாரில் ஒருவேளை ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி இருந்தால் மட்டுமே அதனை செய்ய முடியும்.
இதனிடையே ஆதார் கார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
ஏனென்றால் ஒருவருடைய ஆதார் கார்டை மற்றொருவர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் பெறும் வசதியும் உள்ளதால் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியமானது.
எனவே உங்களது ஆதார் கார்டில் எந்தெந்த மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களுடைய 10 இலக்க மொபைல் நம்பரை பதிவிட்டு ஓடிபி நம்பரை பதிவு செய்து சைன் இன் செய்ய வேண்டும்.
துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள வீட்டை கன்ட்ரோல் பண்ண பாலிகாப் HOHM ஆட்டோமேஷன் !
அதன் பிறகு உள்ளே சென்றதும் உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தாத அல்லது உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பர் ஏதாவது அங்கே இருந்தால் அதனை நீங்கள் எளிதில் டெலிட் செய்து விடலாம்.
Thanks for Your Comments