இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும்,
ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா?
என்பதை கண்டறிவதற்காகவும் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஆண்களுக்கு உண்டாகும் முக்கியமான நோய்கள் !
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன்வந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன்
இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் 'இ' சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணினை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (http://www.nvsp.in),
வாக்காளர் உதவி செயலி அல்லது வாக்காளர் இணைய தளம் voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம் தாங்களே ஆதார் எண்னை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம் 6டீ-ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம்,
வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இரத்த தானம் செய்யும் முன் தெரிந்துக் கொள்ளுங்கள் !
இ-சான்றிதழ் வெற்றிகரமாக ஆதார் எண்ணினை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணினை தனியாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் elections.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் முகவரிக்கு சென்று உங்களது மொபைல் எண்ணிணையும்,
ஓ.டி.பி. எண்ணையும், ஏற்கனவே குறித்து வைத்துள்ள குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் சான்றிதழ் கிடைக்கும்.
Thanks for Your Comments