இந்தியா முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆதார் கார்டு இல்லாத ஆளே இல்லை. ஆனால் ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்திருக்கிறார்களா என்றால் சந்தேகம் தான்.
ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் எடுக்கப்பட்டதோ இருந்த மொபைல் நம்பர் இப்போது கையில் இருக்காது.
அந்த மொபைல் நம்பர் தொலைந்து போயிருக்கலாம். அல்லது நெட்வொர்க் மாறியபோது மாறியிருக்கலாம். பலருக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் என்ன என்பதே தெரியாமல் இருக்கும்.
HDL நல்ல கொழுப்பு ஏன்?
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் நம் கையில் இருந்தால் தான் ஆதாரில் முக்கியமான திருத்தங்களைச் செய்ய முடியும்.
எனவே ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வமான uidai.gov.in என்ற முகவரியில் சென்று My aadhaar -> Aadhaar services என்பதை கிளிக் செய்யவும்.
அதில் முதல் ஆப்சனாக இருக்கும் Verify Aadhaar number என்பதில் சென்றால் புதிய பக்கம் ஒன்று திறக்கும். உங்களது ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு Proceed கொடுக்க வேண்டும்.
இப்போது உங்களது ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களும் காண்பிக்கப்படும். அதில், பெயர் முகவரி, ஆதார் எண், வயது, மாநிலம், மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் இருக்கும்.
LDL கெட்ட கொழுப்பு ஏன்?
உங்களது மொபைல் நம்பர் ஆதாரில் இணைக்கப் பட்டிருந்தால், அந்த மொபைல் நம்பரின் கடைசி மூன்று இலக்கங்கள் தெரியும்.
அதை வைத்து உங்களுடைய எந்த நம்பர் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
Thanks for Your Comments