மூளையிலிருந்து வெளிவந்து, காதின் உள்பகுதியில் புகுந்து, காது வெளி மடல்களின் கீழ் பகுதி வழியாக முகத்தில் இணையும் நரம்பே முக நரம்பாகும் (Facial nerve).
தசைகள் பலவீனமடைவதால் முகத்தின் ஒரு பக்கம் கோணலாகவும் ஆகிவிடும்.
மேலும், வேறு ஏதாவது நோயினால் உடலில் பலவீனம் ஏற்பட்டிருந்து அதனால் முகத்தின் தசைகள் பலவீனம் அடைவதாலும் முகம் இது போல் ஒரு பக்கம் செயலிழந்து விடுகிறது.
இது பெல்ஸ் பால்ஸி (Bells palsy) என்று அந்தப் பிரச்னைக்கு புதிதாக ஒரு பெயர் கூறினார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன்.
நீரிழிவின் முதல் எதிரி செர்ரி பழம் !
யாரையெல்லாம் தாக்கும் ?
25 வயது தொடங்கி 60 வயது வரை உள்ளவர்களையே பெல்ஸ் பால்ஸி அதிகம் தாக்குகிறது. சிறுவர்களையோ, வயோதிகர்களையோ பெரும்பாலும் தாக்குவதில்லை.
வைரஸ் தொற்று ஏற்படுவதே இதற்கு முக்கிய காரணம். காதுகளில் எலும்புப்பகுதியில் ஏற்படும் தொற்றுகளாலும் பெல்ஸ் பால்ஸி வருகிறது.
ஒருபக்க கண் மூட முடியாமல் தொடர்ந்து கண்ணில் நீர் வடிதல் போன்றவை பெல்ஸ் பால்ஸியின் முக்கிய அறிகுறிகள்.எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?
பெரும்பாலும் நோயாளிகளே சொல்லி விடுவார்கள். எனக்கு காலை எழுந்த போது முகம் கோணலாகி விட்டது; பயணம் செய்து விட்டு வரும் போது இப்படி ஆகிவிட்டது.
அலுவலகத்தில் ஏசி அருகில் அமர்ந்து வேலை செய்யும் போது இதுமாதிரி வந்து விட்டது என்று சொல்லி விடுவார்கள்.
இது மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் நெடுந்தூரப் பயணம் செல்லும் போது ஹெல்மெட் போட்டுக் கொள்ளாமலோ, காதுகளை மூடிக்கொள்ளாமலோ பயணிப்பவர்களுக்குக் காதினுள் புகும் எதிர்காற்றும் தொற்றுகளை வரவைத்து விடுகிறது.
பேருந்து, ரயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கையில் அமர்கிறவர் களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இவர்கள் காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது தான் பாதிப்பு தெரிய வரும்.
ஒரு பக்க கண் மூட முடியாமல் நீர் வந்து கொண்டே இருக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீர் வழிவது கூட தெரியாமல் இருப்பார்கள்.
வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் !
பெல்ஸ் பால்ஸி குணமாகக்கூடியதா?
பெல்ஸ் பால்ஸி 3 அல்லது 4 வாரங்களில் முற்றிலும் குணமாகக்கூடிய ஒன்று என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
ஆனால், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சையோ, முகத்திற்கு பயிற்சிகளோ எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நிரந்தரமாக முகம் கோணலாகி விடக்கூடிய அபாயம் உண்டு.
சிகிச்சைகள்...
முதல்கட்டமாக நோயாளிக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று வேறு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதற்கேற்றாற் போல ஸ்டீராய்டு மருந்தோடு ஆன்ட்டி வைரஸ் மருந்துகளும் கொடுக்கலாம்.
இந்த மருந்துகளை 3 நாட்கள் எடுத்துக் கொள்வது அவசியம். முக்கியமாக பிஸியோதெரபி பயிற்சியாளர் மூலம் முகத்துக்கான சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்துவோம்.
முதல் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பிஸியோ தெரபி பயிற்சியாளரின் உதவியோடு பயிற்சிகள் கற்றுக் கொண்டு, அதன் பின்பு நோயாளிகளே வீட்டில் முகப்பயிற்சிகள் செய்து கொள்ளலாம்.
எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?
சமீபத்தில் தலைநகர் டெல்லியில் 18ம் தேதி ஜஸ்டின் பீபர் ஜஸ்டிஸ் வேர்ல்ட் டூர் என்ற கலை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கிராமி விருது பெற்ற பிரபல பாப் பாடகரின் ஜஸ்டின் பீபர் (28) என்பவர் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தனது இந்திய பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார்.
முகத்தின் ஒரு பகுதியால் மட்டுமே புன்னகைக்க முடியும்; மற்ெறாரு பக்கத்தின் கண், மூக்கு, உதடுகளை அசைக்க கூட முடியாது.
மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !
நோய் குணமடைந்த பின்னர் புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !
நல்வாழ்த்துகள் !
Thanks for Your Comments