டாட்டூஸ் எனப்படும் பச்சைக்குத்திக் கொள்ளுதல், இப்போது இளைய தலைமுறை மத்தியில் ஃபேஷன்... பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே பச்சைக் குத்துவது பின்பற்றி வரப்படுகிறது.
பச்சை குத்தும் முறை மருந்துப் பொருட்களை கூரிய ஊசி முனையில் வைத்து, தோலின் மேல்புறத்தில் தீட்டுவார்கள். இது, மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப நிறம் மாறும்.
அந்த நிறமானது மேல் தோலின் உட்பகுதியை அடைந்ததும், நிலையாக அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று ஆழத்தில் உட்தோலில் ஊசியைச் செலுத்தினால், எந்தக் காலத்திலும் அழியாமல் நிலையாக இருக்கும். டாட்டூஸ் வரைவதில் தேர்ந்த கலைஞர்களிடம் பச்சைக்குத்திக் கொள்வது நல்லது.
நுங்கு சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் !
சரும அழற்சி
பல வண்ணங்களில் டாட்டூக்கள் குத்திக் கொள்ள இரசாயன சாயங்கள் உபயோகிக்கப் படுகின்றன இதன் காரணத்தினால் சரும அழற்சிகள் ஏற்படுகிறது.
முக்கியமாக டாட்டூ குத்திக் கொண்ட இடத்தில் சூரிய ஒளிப்படும் போது தான் அழற்சி அதிகமாகிறது. டாட்டூக்கள் குத்துவதனால் தோலில் வடுக்கள் வருகிறது.
பெரும்பாலானோருக்கு டாட்டூவிற்கு உபயோகப் படுத்தப்படும் அந்த இரசாயன சாயத்தினை அழிக்கும் போது தான் வடுக்கள் ஏற்படுகிறது.
சரும தொற்றுகள்
தோல் வீக்கம், வலி, சிவந்து தடித்தல் போன்றவை நோய் தொற்றுக்கு அறிகுறிகளாக இருக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவிகள் எதிர்பார்க்கும் விஷயம் !
ஸ்கேன் எடுக்கும் போது
ஏதாவது காரணத்திற்க்காக நீங்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன்னிங் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு டாட்டூ குத்திய இடத்தில வீக்கமும், எரிச்சலும் ஏற்படும்.
நீங்கள் டாட்டூ குத்திய இடத்தில் நிரந்தரமாக சரும நிறம் மாறிடும் வாய்ப்பிருக்கிறது. நிறைய வருடங்களுக்கு பிறகு இந்த நிறம் மாற்றம் குறையலாம்.
எனினும், டாட்டூ குத்திவதற்கு முன் இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்வது அவசியம்.
இரத்தத்தின் அடர்த்தி
டாட்டூ குத்துவதனால் உங்களது இரத்தத்தின் தன்மை மெலிவடைவதாக கூறப்படுகிறது. இரத்தம் மீண்டும் அதன் பழைய தன்மையை பெற நீண்ட நாட்கள் ஆகுமாம்.
குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?
இரத்தக்கட்டி
டாட்டூ குத்தும் போது இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. நிணநீர் அமைப்பில் வீக்கம் அல்லது கட்டிகள் ஏற்படலாம், இதன் மூலம் அப்பகுதியில் பளு அதிகரிக்கும்.
Thanks for Your Comments