கேரள மாநில திரைப்பட விருது... 39 ஆண்டுகால கனவு... மகிழ்ச்சியில் ரேவதி !

0

ஆங்கில மொழியில் Mitr, My Friend என்ற படம் தான் ரேவதி முதல் முறையில் இயக்கிய படம் ஆகும். தற்போது சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை ரேவதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில திரைப்பட விருது... 39 ஆண்டுகால கனவு... மகிழ்ச்சியில் ரேவதி !
பிரபல நடிகை ரேவதி கேரள மாநில விருதை வாங்கியதன் மூலம், தனது 39 ஆண்டு கால கனவு நிறைவேறி விட்டதாக நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களின் கால கட்டத்தில் கதாநாயகியாக கோலோச்சியவர் ரேவதி. 

வெளிச்சத்திற்கு மயங்கும் பறக்கும் மீன்கள்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருதுகளையும், ஃப்லிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ள ரேவதி இயக்குனராகவும் சாதித்துக் காட்டியுள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திரா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். 

எனினும் இருவரும் இன்று வரை நல்ல நட்புடன் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறினார். இந்த நிலையில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை பூதகாலம் படத்திற்காக வென்றுள்ளார். 

இதன் மூலம் நடிகை ரேவதி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இதற்கு காரணம் தனது பூர்வீகமான கேரளாவின் விருதை முதல் முறையாக வென்றுள்ளது தான்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த விருதை பலமுறை எனது நண்பர்கள் கைகளிலும், வீடுகளிலும் பார்த்திருக்கிறேன். 

யானைகளின் பிளிறலில் இருந்து அதன் வயதை கணக்கிடலாம்
பலமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நழுவி போயிருக்கிறது. தற்போது நான் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்திருக்கிறது. 

அதற்காக பூத காலம் திரைப்படத்தின் இயக்குனருக்கும், கேரள விருது வழங்கும் குழுவிற்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவிற்கு திரையுலக தோழிகள் முதல் நித்யா மேனன் வரை பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings