உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கு விலை உயர்ந்த செயல்முறை எதுவும் தேவையில்லை.
வேறு என்ன செய்ய வேண்டும்? ஒரு கண்ணாடியின் முன் நின்று உங்கள் வாயை திறந்துப் பார்த்தாலே போதும்.
உங்கள் வாயின் நிலையே உங்களைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களைச் சொல்லும். முக்கியமாக உங்கள் உள் ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக சொல்லும்.
வாய் ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால்,
பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும் போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி_12 ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_ விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப் படியான நீர் வெளியேறு வதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது.
மேலும் அதிகப் படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
மேலும் அதிகப் படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன் கூடவே பழங் களையோ பழச்சாறோ அருந்து தலும் நல்ல பலன் தரும்.
Thanks for Your Comments