உண்மையில், இந்த சட்டத்தில் யாரெல்லாம் அடங்குவர், யாரெல்லாம் இந்த சட்டத்தில் விடுபட்டுள்ளனர்? இந்திய வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டம் பாலின சமத்துவத்துடன் உள்ளதா?
மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது.
பிறகு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டம் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?
வணிக நோக்கில் வாடகைத் தாய் முறையில் ஈடுபடுவது இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது. தன்னலமற்ற நோக்கத்துடனேயே இதனை செய்ய வேண்டும் என இச்சட்டம் சொல்கிறது.
ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மகப்பேறின்மை பிரச்னை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ, அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப் படுகிறது.
அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
அப்படி வாடகைத் தாயாக இருக்க முன் வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும்.
சட்டம் என்ன சொல்கிறது?
திருமணமான இந்திய ஆண் மற்றும் பெண்ணில் இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ குழந்தை பெற்றுக் கொள்ள
உடல் ரீதியாக பிரச்னைகள் ஏற்படும் போது, அத்தம்பதி வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இதில், ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால், திருமணமாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என இச்சட்டம் சொல்லவில்லை என்கிறார்,
கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !
மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான சாந்தி ரவீந்திரநாத்.
இந்த சட்டம் மசோதாவாக இருக்கும்போதே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனை அரசுக்கு கோரிக்கைகளாக முன் வைத்திருந்தோம்.
அதில் முதலாவது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிக்கு திருமணமாகி 5 அண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது. இது, மசோதாவில் தான் இருந்தது.
இயற்கையாகவே கர்ப்பப்பையில் பிரச்னை இருக்கும் பெண்கள் ஏன் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும், எனவே இதனை அறிவியல் பூர்வமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதனால், அந்த விதியை சட்டமாக்கும் போது நீக்கி விட்டனர் என்றார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
மேலும், விவாகரத்தான அல்லது கணவனை இழந்த பெண்கள் இந்த சட்டத்தின் மூலம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பெண்ணுக்கு 35-45 வயதுக்குள் இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.
சட்டம் பாலின சமத்துவத்துடன் இருக்கிறதா?
இந்த சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது அல்லது யாரெல்லாம் இந்த சட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளனர் என்பது' பாலின சமத்துவம்' குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
அதே சமயத்தில், இந்த சட்டத்தை வழக்கமான அணுகு முறையுடன் அல்லாமல் இன்னும் சுதந்திரமாக அணுகியிருக்க வேண்டும் என்ற வாதமும் எழுகிறது.
உதாரணமாக, திருமணமான தம்பதி குறித்து மட்டுமே இந்த சட்டம் பேசுகிறது. திருமணமாகாத, ஆனால் ஒருமித்த உறவில் உள்ளவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
இதனை, திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவு படுத்தியுள்ள தீர்ப்புடன் நாம் பொருத்திப் பார்க்கலாம்.
புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !
அப்படியெனில், திருமணமாகாத வர்களுக்கு கருக்கலைப்பு உரிமை உள்ளது போன்று, திருமணமாகாமல் உள்ளவர்களும் வாடகைத்தாய் முறையில்
குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை கோருவது நியாயமான கோரிக்கையே என்கிறார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
அதே போன்று, தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட குயர் சமூகத்தினருக்கும் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
Thanks for Your Comments