ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற பலகையின் பின்னணி... இது தெரியாம போச்சே !

0

ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. 

ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற பலகையின் பின்னணி... இது தெரியாம போச்சே !

ரயில் நிலையங்களுக்கு  அல்லது ​​சில சமயங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் போது, பொழுது போவதற்காக சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்திருக்க கூடும். 

வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

அபோது உங்கள் கண்ணில் நிச்சயம் ரயில் நிலையத்தில் (Railways) வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள், ரயிலின் மீது எழுதப்பட்டுள்ள ரயில் நிலையத்தின் பெயர்கள் ஏன் மஞ்சள் பின்னணியில், 

கருத்து எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது என நீங்கள் யோசித்தது உண்டா? இதன் பின்னணி வரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மஞ்சள் நிற பலகை:

ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற பலகையின் பின்னணி... இது தெரியாம போச்சே !

ரயில்வே கிராசிங் அல்லது ரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தைப் பார்த்திருக்க வேண்டும். குறிப்பாக ரயில் நிலையத்தின் பலகைகளில், நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். 

இதில் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களின் கலவையாக அந்தந்த ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இதன் பின்னணியில்  ஒரு காரணம் உள்ளது.  

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !

மஞ்சள் தவிர வேறு எந்த நிறத்தையும் பயன்படுத்துவதில்லை. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப் பட்டிருக்கும். 

ரயில் நிலையத்தின் பெயர் மஞ்சள் பலகையில் (Yellow Board) எழுதப்பட்டதற்கு மிகப் முக்கிய காரணம், மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமாக நிறமாக இருக்கிறது. 

இது தூரத்திலிருந்து ரயில் ஓட்டுநருக்கு அதாவது லோகோ பைலட்டுக்கு நன்றாக தெரியும் நிறமாகும். இது தவிர, மஞ்சள் நிறமும் கவனம் என்பதை குறிக்கிறது. 

ரயில் நிலையத்தில் பலகை மஞ்சள் நிறத்தின் பின்னணியிப் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு இருப்பதற்கான காரணம் இது தான்.

MSL (Mean Sea Level) 

ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற பலகையின் பின்னணி... இது தெரியாம போச்சே !

மேலும் இதில் கருப்பு நிறத்தில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழி என்று மொத்தம் 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். 

இந்த பெயர் பலகையில் கடல் மட்டத்தில் இருந்து அந்த ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப் பட்டிருக்கும். அதாவது MSL (Mean Sea Level) என்று எழுதப்பட்டிருக்கும். 

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் ! 

இந்திய ரயில்வே மூலமாக இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் வைத்து தான் இந்த MSL என்று குறிப்பிடப்படுகிறது. 

என்ன உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதை லோகோ பைலட்கள் (ரயில் ஓட்டுனர்கள்) மற்றும் கார்டுகள் தெரிந்து கொள்வதற்கு MSL உதவுகிறது. 

அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டு இருப்பதற்கு காரணம் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கண்களுக்கு தெரியும் என்பது தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings