இந்திய ரயில்வேயில் இனி குறிப்பிட்ட ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டை வைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.
ரயில் பயணங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தவை. சன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு தடதடக்கும் சத்தத்தோடு விரைந்து செல்லும் உலகை பார்ப்பதே தனி அழகு.
தினமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்கி வருகிறது. அதில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றன.
ரயில்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் ஒன்று குறைந்த தூர ரயில்கள் மற்றொன்று நீண்ட தூர ரயில்கள். இதில் குறைந்த தூர ரயில்கள் எல்லாம் முன்பதிவில்லாத பெட்டிகளைக் கொண்டு இயங்குகிறது.
வக்கிரத்தின் உச்சம்... இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !
இதுவே நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் என இரண்டு வகை பெட்டிகள் இருக்கின்றன. இதில் முன்பதிவு செய்த பெட்டிகளின் எண்ணிக்கை தான் அதிகம்.
தற்போது இப்படி இயங்கி வரும் நிலையில் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் எடுத்து விட்டு ஒரு பயணி முன் பதிவு செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்தால் அவர் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.
முன்பதிவில்லாத பெட்டிகள் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் முன் பதிவு செய்த பெட்டிகளின் நிறைந்து டிக்கெட் எடுத்தவர்களும் உட்கார முடியாத நிலை இருக்கும்.
அதே போல சில பயணிகள் கடைசி நேரத்தில் குறைந்த தூரப் பயணத்திற்காக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் டிக்கெட் புக் செய்ய முயற்சிக்கும் போது டிக்கெட்களும் கிடைப்பதில்லை.
இதைச் சமாளிக்க ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் வகையிலான ஒரு திட்டம் ஒன்றைத் ரயில்வே நிர்வாகம் தயார் செய்துள்ளது.
அதன்படி இந்த திட்டத்தின் கீழ் ரயில் இயங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தால் அந்த ரயிலின் எந்த பெட்டிகள் இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் என்பதையும் அறிவிக்கும்.
அதே போல இந்த திட்டத்தின் படி முன்பதிவு செய்யாத டிக்கெட் வைத்திருப்பவர்கள் எந்த ஸ்டேஷனிலிருந்து எந்த ஸ்டேஷன் வரை முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கலாம் என்ற தகவலையும் சொல்லும்.
144 மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல் !
அதன்படி பயணிகள் இரண்டு வழிகளில் இந்த டிக்கெட்டை பெற முடியும். குறிப்பிட்ட ரயிலுக்காக டிக்கெட் எடுக்கும் போதே
குறிப்பிட்ட ரயிலின் பெயரைச் சொல்லி அந்த ரயிலுக்கான டிரிசர்வேசன் டிக்கெட்டை டிக்கெட் கவுண்டரிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டிக்கெட் வைத்திருப்பவர்கள் முன்பதிவில்லாத பெட்டியில் தான் பயணம் செய்ய வேண்டும் என்பதில்லை மாறாக டிரிசர்வேஷனிற்காக ஒதுக்கப்பட்ட பெட்டியிலும் பயணிக்கலாம்.
அல்லது மற்றொரு வழி என்றால் டிரிசர்வேஷன் இல்லாமல் சாதாரண முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்தவர்கள்.
அந்த பெட்டியில் கூட்டமாக இருந்தால் குறிப்பிட்ட ரயிலின் டிரிசர்வேஷன் பெட்டியில் ஏறிக்கொண்டு டிக்கெட் பரிசோதகரிடம் அந்த டிக்கெட்டை டிரிசர்வேஷன் டிக்கெட்டாக மாற்றித் தரும்படி கோரலாம்.
சாதாரண முன்பதிவில்லாத டிக்கெட்களுக்கும், டிரிசர்வேஷன் டிக்கெட்களுக்கும் பணம் வேறுபடும்.
ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !
டிரிசர்வேஷன் டிக்கெட்கள் முன்பதிவு டிக்கெட் விலையிலிருந்து குறைவாகவும் சாதாரண முன்பதிவில்லாத டிக்கெட் விலையிலிருந்து அதிகமாகவும் இருக்கும்.
டிக்கெட் பரிசோதகரிடம் சாதாரண முன்பதிவில்லாத டிக்கெட்களை மாற்றும் போது மீதம் இருக்கும் பணத்தை அவரிடமே பயணத்தின் போதே கட்டலாம்.
Thanks for Your Comments