18ம் நூற்றாண்டு காலங்களில் குடை பெண்களுக்கான ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஜோனஸ் ஹான்வே என்ற ஆண் ஒருவர் நவீன குடைகளை பயன்படுத்த ஆரம்பித்தார்.
இது ஒரு வரலாற்று செய்தியாகவே பதிவிடப்படுள்ளது. இந்த ஆங்கிலேயர் பொது இடங்களுக்குச் செல்லும் போதும் குடைகளை எடுத்துச் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டார்.
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 1
அதன் பிறகே ஆண்களும் குடை எடுத்துச்செல்லும் பழக்கம் வந்தது. அவரை பார்த்த பிறகே உலகில் பல ஆண்களும் குடைகளை ஒரு உபயோகிக்கும் பொருளாக பயன்படுத்தினர்.
தற்போது உள்ள நவீன குடைகள் கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடைகளின் மாதிரி வடிவத்தை ஒத்திருக்கின்றன.
குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப் படலாம்.
முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
நவீன கால குடை வெளிப்புறங்களில் டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும், அவை அவற்றின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது.
நவீன குடைகள் பெரும்பான்மையானவை சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. சீனாவின் ஒரு நகரமான ஷாங்யுவில் ஆயிரம் குடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.
உங்கள் வீட்டின் மதிப்பு என்ன? உதவுகிறது இணையதளம் !
இப்படி பல்வேறு வகையான வரலாறுகள் கொண்ட குடையின் சிறப்புகளை நினைவு கூறும்ம் போது, மழையில் நாம் மறந்து வைத்து விட்டு வந்த குடைகள் நியாபகத்திற்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை.
சரி, மழையோ வெயிலோ எதுவாக இருந்தாலும் நம்மை காத்த குடைக்கு ஒரு நன்றி சொல்லி விடுவோம்.
Thanks for Your Comments