பட்டாம்பூச்சி விளைவவை (Butterfly Effect ) பற்றி நாம் அறிவோம். நாகபாம்பு விளைவு, அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
பாம்புகள்
குறித்து பலருக்கும் பல்வேறு விதமான உணர்வுகள் உண்டு. அந்த பாம்பை கண்டாலே
வெறுக்கும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
சிலருக்கோ, பாம்பைப்
பார்த்தவுடன் அச்சம் மேலோங்கும். பிறகு, எதை பார்த்தாலும் பாம்பாகத்
தோன்றும்.
இன்னும் பலர், அதை ஓர் எதிரியாகவே நினைத்து, பார்த்தவுடன்
அடித்துக் கொன்றே தீர வேண்டுமென்று துடியாய்த் துடிப்பர்.
ஒரு சிலரே
பாம்புகளை ஓர் உயிராக மதித்து அவற்றுக்குரிய வாழ்விடத்தைப் பாதுகாக்க
முனைகின்றனர். உணவுச் சங்கிலி குறித்து அனைவருக்குமே தெரியும்.
அந்த உணவுச்
சங்கிலியில் இரையாகவும் வேட்டையாடியாகவும் செயல்பட்டு, அதைச் சமநிலையிலேயே
வைத்திருப்பதில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது.
ஆகவே, ஆரோக்கியமான
சூழல் உருவாக பாம்புகளின் இருப்பும் அவசியமாகிறது. ஆனால் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்சனையை தீவிரப்படுத்தியது ஆங்கிலேய அரசாங்கம்.
நம்
இந்தியாவை ,ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது, தலைநகர்
தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து
காணப்பட்டுள்ளது .
இதனால் கவலையுற்ற பிரித்தானிய அரசாங்கம், பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் ஒரு திட்டத்தை அறிவித்தது.
முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !
அதாவது கொல்லப்படும் நாகப்பாம்புகளுக்கு,எண்ணிக்கை அடிப்படையில் தக்க சன்மானம், வெகுமதி வழங்குவதாக அறிவித்தது.
இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மக்களும் இறந்த பாம்புகளை காட்டி, சன்மானத்தை பெற்றுக் கொண்டே இருந்தனர்.
காலப்போக்கில்,சிலர் சன்மானம் பெறுவதற்காகவே பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். இதனை அறிந்த ஆங்கிலேய அரசு,இந்த வெகுமதி திட்டத்தை நிறுத்தியது.
வெகுமதி கிடைக்காத விரக்தியில் பாம்பை வளத்தவர்களே, அவைகளை தப்பிக்க விட்டனர். இதனால்,முன்பு இருந்த எண்ணிக்கையை விட பல மடங்கு பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
கூந்தலின் நிறம் வேறுபடுவது ஏன்?
ஆக,முன்பு இருந்த நிலைமையை விட, இந்த திட்டத்தால், நிலைமை இன்னும் மோசமாகியது. இதை தான், நாகபாம்பு விளைவு (Cobra Effect ) என அழைக்க படுகிறது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வு, அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, அதனை மேலும் தீவிரப்படுத்துவதே , Cobra Effect .
Thanks for Your Comments