நோயாளிகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாகச் சாப்பிடுவது, அந்த மருந்துகளை இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பிடுவதும்,
திடீரென நிறுத்துவது போன்ற காரணங்களால் மருந்து எதிர்ப்புத் திறன் அதிகமாக ஏற்படும். மருந்தைப் பாதியில் நிறுத்துவதால் நோய்க் கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும்.
ஒரு மருத்துவரிடம் சென்று குணமாகவில்லை என்றால் வேறொரு மருத்துவரிடம் செல்வது, அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிடுவது என்று
மாற்றிக் கொண்டே இருந்தாலும் மருந்து எதிர்ப்பு திறன் உருவாகும். இதனால் எந்த மருந்து கொடுத்தாலும் நோய் குணமாகாத நிலை ஏற்படும்.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
இந்த ஆராய்ச்சி முடிவு பற்றி சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் துறை மருத்துவர் ஸ்பூர்த்தி அருணிடம் பேசினோம்:
பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்துக் கடையிலேயே நேரடியாக வாங்கிக் கொள்ளும் OTC (Over the Counter) மருந்தாகக் கிடைக்கின்றன.
இதனால் மருத்துவரிடம் செல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று அறிகுறிகளைச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனர்.
அப்படி வாங்கிச் சாப்பிடும் மருந்தையும் முழுமையாக (complete Course) எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நோயின் தீவிரம் சற்றுக் குறைந்ததும் மருந்துகளை உடனடியாக நிறுத்தி விடுகிறார்கள்.
பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
சில மருத்துவர்களும் தேவைக்கு அதிகமாகவும், வைரஸ் தொற்றுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். வைரஸ் தொற்றுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது.
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
சில நோயாளிகள் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் போது ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிட்டால் தான் கேட்கும் என்ற பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
இதனால் மருத்துவரிடம் கட்டாயப்படுத்தி கேட்டு வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
சளி, காய்ச்சல், சைனஸ் தொந்தரவு, வைரஸ் தொற்று எனப் பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.
அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது, மருந்துகளை முழுமையாகச் சாப்பிடாமல் பாதியிலேயே நிறுத்துவது போன்ற பழக்கத்தால் அதிக மருந்துகளுக்கான எதிர்ப்புத் திறன் (Multi Drug Resistance) உருவாகும்.
உதாரணத்துக்கு ஒரு பாக்டீரியா சுமார் பத்து ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும். ஆனால், அந்த மருந்துகளை அடிக்கடி எடுப்பது அல்லது முழுமையாக எடுத்துக் கொள்ளாததால் அந்த மருந்தைக் காட்டிலும்
பாக்டீரியாவின் வீரியம் அதிகரித்து அந்த மருந்துகளால் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
இதுபோன்ற பிரச்னை ஏற்படும்போது நோயாளிக்கு கொடுக்க வேறு மருந்துகள் இல்லாமல் போகும். இல்லையென்றால் அதிக வீரியம் கொண்ட மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் தான் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், இது மருத்துவரின் பரிந்துரையின்றியே வாங்கிக் கொள்ள முடியும்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டும் தான் கொடுக்கப் படுகின்றன.
ஆனால், சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரையை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாமல் அதிகமாக, தவறாக எடுத்துக் கொள்கின்றனர்.
இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை மருத்துவர்களும் பொறுப்புணர்வுடன் தேவையானவர்களுக்கு மட்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !
பொது மக்களும் மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
Thanks for Your Comments