இந்த வாட்ச்சின் விலை 27 கோடி... போலீஸே தலை சுற்றி போயிட்டாங்க !

0

ரூ.27.09 கோடி மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட, வைரங்கள் பதித்த 7 ஆடம்பர கைக்கடிகாரங்களை கடத்தியதாக டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இந்த வாட்ச்சின் விலை 27 கோடி... போலீஸே தலை சுற்றி போயிட்டாங்க !

ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் இது மிகப்பெரிய பறிமுதல் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

கொரோனாவை எதிர்க்கும் ஆண்டிபாடி.. சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி !

மதிப்பு அடிப்படையில் பார்த்ததால், சுமார் 60 கிலோ தங்கத்தை கைப்பற்றுவதற்கு சமம் என்று கூறினர். குற்றம் சாட்டப்பட்ட இந்தியர், துபாயில் இருந்து வந்தவர் என தெரிய வந்தது.  

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச்களின் மாடல்: Jacob & Co, Piaget limelight stella, Rolex oyster perpetual date just வாட்ச் வகைகளில் 5. 

இதில் ஜேக்கப் அண்ட் கோ நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்று மட்டும் ரூ.27.09 கோடி மதிப்புடையது என்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

பொதுவாக இது போன்ற கடிகாரங்களை இந்தியா கொண்டு வர வேண்டும் என்றால், முறையான சுங்க வரி செலுத்த வேண்டும். இறக்குமதி வரி கொடுக்க வேண்டும். 

நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது?

அவற்றில் இருந்து தப்பிக்க இது போல மோசடியான வழிகளில் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப் படுகின்றன. 

அவற்றில் இது மிகப்பெரிய கடத்தல் என அதிகாரிகளே வியந்து பார்க்கும் அளவுக்கு வாட்ச்களின் விலை உள்ளது. 

தெரியுமா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings