61 வயது முதியவருக்கு 88வது திருமணம்..ஓ மை காட் !

0

இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயதான ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். 

61 வயது முதியவருக்கு 88வது திருமணம்..ஓ மை காட் !

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் அவர் ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்த முன்னாள் மனைவியையே திருமணம் செய்ய இருப்பது தான் ஹைலைட்டே.

உலகக் கோப்பை கனவு க்ளோஸ் - கோலி சொல்லும் லாஜிக் !

திருமண வாழ்க்கை பலருக்கு இனிமையானதாகவும் பலருக்கு விரும்பத் தகாததாகவும் இருக்கிறது. 

ஒரே ஒரு திருமணம் செய்து வாழ்க்கையில் அல்லல் படும் தம்பதிகளின் மத்தியில் இங்கு ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயது உடைய மனிதர் ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார். 

கால் என பெயருடைய அவர் தன்னுடைய முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய இருப்பது தான் மிக சுவாரசிய தகவல். 

தன்னுடைய மனைவி திரும்பி வரும் போது என்னால் அவரை மறுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் பிரிந்து மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. 

மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்

எங்களுக்கிடையே உள்ள காதல் இன்னும் மிக வலிமையாகவே இருக்கிறது என்று 61 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

இந்த மனிதருக்கு 14 வயது இருக்கும் போது இப்படி பல்வேறு திருமணங்களை செய்து கொள்ள ஆரம்பித்தார். 

மிக இளம் வயதில் திருமணம் செய்தது ஒருபுறம் இருக்க, தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது தவறையும் செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய முதல் திருமணம்  இரண்டு ஆண்டுகளில் நீடித்த நிலையில் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து விட்டார். 

ஆனால் என்னுடைய மோசமான நடத்தையினால் தான் என் மனைவி என்னை விட்டு நீங்கி விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திருமணத்தில் மன உளைச்சல் அடைந்த அவர் அதன் பிறகு ஆன்மீகத்தின் பக்கம் திரும்பி பெண்கள் தன்னை தேடி வருவதற்கு உண்டான சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். 

பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?

தற்பொழுது அவருக்கு 88 வது முறையாக தனது முன்னாள் மனைவியுடன் திருமணம் நடக்க இருப்பது குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கிறார். 

மேலும் இந்த திருமணத்தின் மூலம் தங்கள் காதலை இன்னும் பலப்படுத்தி வாழ்க்கையை உற்சாகமாக வாழ போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings