ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பா? பின்னணி என்ன?

0

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸின் ஈபிள் டவரின் உயரம் சுமார் 20 அடி (6 மீ) கூடியிருப்பதாகப் பேசப்படுவது. உண்மையா? இதன் பின்னணி என்ன?

ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பா? பின்னணி என்ன?

பாரீஸ் என்றதும் உடனே நினைவுக்கு வருவது ஈபிள் கோபுரம் (Eiffel Tower). 1889 - கட்டப்பட்ட ஆண்டு 1,063 அடி - மொத்தம் உயரம் 81 கோபுர அடுக்குகளின் எண்ணிக்கை 1,665 மொத்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை.

இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை செய்வது !

ஈபிள் டவர், அதன் தனித்துவமான டிசைனாலும் உயரத்தாலும் உலக அளவில் மக்களை ஈர்த்து வருகிறது. 

19-ம் நூற்றாண்டில் Gustave Eiffel என்ற பொறியாளரால் கட்டப்பட்ட போது, வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை விட பெரியதாக வடிமைக்கப்பட்டது. 

இதன் மூலம் மனிதர்களால் கட்டப்பட்ட உயரமான கட்டுமானம் என்ற பெயர் பெற்றது. இந்தப் பெருமையை அந்த டவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை தக்க வைத்திருந்தது. 

1929-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டப்பட்ட Chrysler Building அந்த சாதனையை முறியடித்தது. உலக அளவில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது ஈபிள் டவர்.

உயரத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு காரணங்களால், அது மாறியே வந்திருக்கிறது. 

65 சுங்கச்சாவடிகளுக்கு பாஸ்டேக் விதிமுறைகள் தளர்வு - மத்திய அரசு !

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிராட்கேஸ்டிங் எனப்படும் ஒளிபரப்பு சேவைகளுக்கான பயன்பாட்டில் இந்த டவர் இருந்து வருகிறது. 

டவரின் உச்சியில் அமைக்கப் பட்டிருக்கும் ஆன்டெனாக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படும். இதனால், அதன் உயரமும் அப்போது மாறுபடும்.

அந்தவகையில், பாரீஸில் இருக்கும் அந்த டவரின் உச்சியில் புதிதாக ஒளிபரப்பு சேவைகளுக்கான ஒரு ஆன்டெனா தற்போது பொருத்தப் பட்டிருக்கிறது. 

இது நேரலையாக பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் DAB+  ஆன்டெனா எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்ப ட்டிருக்கிறது. 

இதன் மூலம் டவரின் உயரம் 20 அடி (6 மீ) அளவுக்கு அதிகரித்து, மொத்த உயரம் 330 மீட்டராக இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்த விரிவாக்கம் என ஈபிள் டவர் விரிவாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஏர் இந்திய பெண் ஊழியர் !

இந்த நிகழ்வை சுற்றுலா பயணிகள் பலரும் ட்ரோகாடெரோ எஸ்பிளனே உதவியுடன் பார்வையிட்டனர்.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings