1600 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு காலனிவாசிகள் பஞ்சம் பிழைக்க வந்து இறங்கிய இடம், தற்போதைய கியூபெக் மாகாணம், கனடா. கிட்டதட்ட அதே சமயத்தில் இங்கிலாந்து அரசன்,
கிழக்கு இந்தியா கம்பெனி மாதிரி விர்ஜினியா கம்பெனி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அமெரிக்காவில் காலனி ஏற்படுத்த வழி ஏற்படுத்தினான்.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
பிரெஞ்சு காலனிக்கு போட்டியாக, ஹட்ஸன் பே கம்பெனி என்றொரு தனி நிறுவனத்தையும் உருவாக்கி, கனடாவிலும் குடியிருப்புகளை உருவாக்க ஆரம்பித்தான்.
கடும் குளிர் ஒன்று சேர்த்ததாலோ என்னவோ, கனடா பிரிட்டிஷ் காலனியும், பிரெஞ்சு காலனியும், அடித்தாலும் பிடித்தாலும், பல விசயங்களில் ஒத்துப் போனார்கள்.
அமெரிக்க காலனிவாசிகள் கடைசி வரை ஒட்டவே இல்லை. வந்தது, அமெரிக்க புரட்சி! சில அமெரிக்க காலனிவாசிகள் மஞ்சள் அரைத்தாயா, நாட்டு நட்டாயா என்று பிரிட்டிஷ் அரசுக்கு வரி கட்ட மறுத்தார்கள்.
மற்றொரு பிரிவு, இங்கிலாந்திற்கு மண்டியிடவே வாழ்க்கை என்று இவர்களை எதிர்த்தது. கனடாவிலோ, எல்லா காலனிவாசிகளும் பிரிட்டிஷ் விசுவாசிகள்.
எனவே, இரண்டு காலனிகளும் தனிதனியே வாழ்க்கை நடத்தின, ஏறத்தாழ தமிழ் நாடு, பாண்டிச்சேரி போல (அரசியல் அர்த்தம் ஏதும் கற்பிக்கவில்லை, தெய்வங்களே).
ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !
உள் நாட்டு புரட்சியில் தங்கள் விசுவாசிகளுக்கு உதவ பிரிட்டிஷ் அரசு சிப்பாய்களை கனடா வழியாக அனுப்பி, கனடாவையும் போரில் ஈடுபடுத்தியது.
போர் முடியும் போது ஏற்பட்ட உடன் படிக்கையினால், எல்லை பிரிக்கப்பட்டது. இன்றும் கனடா, அமெரிக்கா எல்லை கோடு பெருவாரியாக நேர் கோட்டில் இருக்கிறது.
ஏரிக்கரை ஓரங்களில் மட்டும் கரை போன போக்கில் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.
Thanks for Your Comments