மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

0

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்து வந்த மனித இனம் இன்று செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் அவர்களின் முயற்சியும், சோதனைகளும் ஆகும். 

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

மனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக இன்று வரை கருதப்படுவது சக்கரம் தான். 

ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல கண்டுபிடிக்கப்பட்ட சக்கரம் தான் மனித குலத்தின் முன்னேற்றத்தின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !

மனிதர்கள் எப்பொழுதும் சோதனைகள் செய்வதற்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். 

ஆனால் அனைத்து சோதனைகளும் வெற்றியில் முடியுமா என்றால் அது சந்தேகம் தான்.சோதனைகள் அதன் எல்லையை கடக்கும் போது அது அனைவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும். 

இதுவரை மனித வரலாற்றில் செய்யப்பட்ட திகிலூட்டும் ஆபத்தான சில சோதனைகளை இந்த பார்க்கலாம்.

ப்ராஜக்ட் ஸ்டார்ம்ப்ரை

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் முன்னேற சில ஆபத்தான விஷயங்களை பரிசோதிக்க விரும்பும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். 

இந்த வகையான சோதனைகளில் ஒன்று 1940-ன் பிற்பகுதிகளில் நடத்தப்பட்டது. 

இர்வின் லாங்முயர் என்ற பெயரில் ஒரு மருத்துவர், புயலைப் பலவீனப்படுத்த பனி படிகங்களைப் பயன்படுத்து வதற்கான ஒரு யோசனையை வகுத்தார். 

ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ ஸ்பைருலினா மாத்திரைகள் !

இதனால் புயலால் ஏற்படும் ஆபத்துகள் குறைக்கப்படும் எனவும், இதனால் மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் நினைத்தார். எனவே அவர்கள் புயலில் இந்த சோதனையை செய்தார்கள். 

ஆனால் நடந்ததோ இதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. படிகங்களை வீழ்த்திய பின்னர் புயல் அதன் திசையை மாற்றிக் கொண்டு ஜார்ஜியாவின் கடலோர நகரமான சவன்னாவுக்கு அருகில் சென்றது. 

இதனால் அங்கு பெரிய உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது.

யானை மற்றும் ஆசிட்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

அதிகளவு LSD கொடுக்கப்பட்டு தாயான யானையின் பெயர் ட்ருக்கோ ஆகும். இந்த யானைக்கு வழங்கப்பட்ட LSD-ன் அளவு சாதாரண மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் அளவை விட 3000 மடங்கு அதிகமாகும். 

ஆண் யானைகளின் நடத்தையை தெரிந்து கொள்ள இந்த சோதனை செய்யப்பட்டது. இது யானைக்கு தற்காலிக வெறியை ஏற்படுத்துமா என்று சோதனை செய்ய ஊசி மூலம் LSD செலுத்தப்பட்டது. 

இதனால் யானை மதம்பிடித்து கட்டுப்படுத்த முடியாத வன்முறையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊசி செலுத்திய 40 நிமிடத்தில் அந்த யானை இறந்து விட்டது. 

வரலாற்றின் மோசமான சோதனைகளில் ஒன்றாக கருதப்படும் இது இரக்கமற்ற மனிதர்களின் இரக்கமற்ற செயலாகும்.

ஹார்ட் ஸ்டாப்பிங்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

ஒருவர் மற்றொருவரின் இதயத்தை கத்தியால் குத்தினார் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் ஒருவர் தன் இதயத்தையே குத்திக் கொண்டார் என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?. 

வெர்னர் தியோடர் ஓட்டோ ஃபோர்ஸ்மேன் ஒரு ஜெர்மன் அறுவை சிகிச்சை பயிற்சியாளராக இருந்தார். 

இவர் தனக்குத் தானே மயக்க மருந்தை கொடுத்துக் கொண்டு அவரது இதயத்திற்கு அவரே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

சுன்னத் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

சில நொடிகளில் இவர் மரணம் அடைந்திருக்கக் கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரின் சோதனை வெற்றியடைந்தது. 

இதய வடிகுழாய் உருவாக்க இந்த சோதனை தான் காரணமாக அமைந்தது. இதற்காக 1956-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நாஜியின் சோதனைகள்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

வரலாற்றின் ஆபத்தான முயற்சிகள் அனைத்திலும் நாஜிக்களின் பெயர் கண்டிப்பாக இருக்கும். நாஜி என்றாலே நமது நினைவிற்கு முதலில் வருவது ஹிட்லர் தான். 

ஹிட்லரின் ஆட்சியில் நடந்த கொடூரங்களை இந்த உலகமே நன்கு அறியும். மனிதர்களை சோதனை எலிகளாக நாஜிக்கள் பயன்படுத்தினர். 

பல விதமான விஷங்களை கொண்டு இவர்கள் செய்த உறைபனி சோதனை பலரின் மரணத்திற்கு காரணாமாக அமைந்தது. மேலும் இதனால் பலரின் மனநலம் பாதிக்கப்பட்டது.

ரஷ்ய போர்ஹோல்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

போர்த்துளை போடுவது சோதனையா என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இது 40,000 அடி ஆழத்திற்கு போடப்பட்ட துளை. பல்வேறு அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி இது 1970 மே 24 அன்று தொடங்கப்பட்டது. 

பூமியின் மேலோட்டத்தில் எவ்வளவு தூரம் தோண்ட வேண்டும் என்பதுதான் இந்த முயற்சி .இப்போது இது பூமியின் ஆழமான செயற்கை துளையாகும். இது பல்வேறு புவி இயற்பியல் ஆய்வுகளின் தளமாக இருந்தது. 

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் பாவோபாப்... ஓர் அதிசயம் !

இந்த சோதனை பூமியின் டெக்டோனிக் தட்டில் மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும், இதன் விளைவாக பூகம்பங்கள் மற்றும் பிற பேரழிவுகள் ஏற்படக்கூடும்.

ஹாட்ரான் மோதல்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

மிகப்பெரிய ஹாட்ரான் மோதல் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது உலகின் மிக சக்திவாய்ந்த துகள் மோதலாகும். இது சுவிட்சர்லாந்தின் நிலத்தடி பகுதியில் அமைந்துள்ளது. 

இதில் புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் பிற துணை அணு துகள்களின் மோதலில் மிக அதிக வேகத்தில் நடத்தப்படுகிறது. துகள் இயற்பியல் மற்றும் உயர் ஆற்றல் இயற்பியல் பற்றி மேலும் அறிய இது செய்யப்பட்டது. 

இது சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு சுரங்கப் பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு உயர் மட்ட திட்டமாகும். 

உலகில் தஜ்ஜால் வரும் நாள் இறுதி என்பது உறுதியானது !

இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் கண்காணிக்கப் படுகிறது. பல விஞ்ஞானிகள் மோதல் ஒரு கருந்துளையை உருவாக்கக் கூடும்.

இது பூமியை அழிக்கக்கூடும் அல்லது வேறு எந்த ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படக் கூடும் என்று நம்புகிறார்கள். ஒரு வேளை இந்த சோதனையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் நமது பூமியே அழிய வாய்ப்புள்ளது.

ஸ்டார்ஃபிஷ் பிரைம்

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

1962 ஜூலை 9-ல் அமெரிக்கா பூமியின் காந்த புலத்திற்கு வெளியே அணு ஆயுதங்களை சோதனை செய்தது. இதில் சுமார் 1.4 மெகாடன் TNT பயன்படுத்தப் பட்டது. 

இந்த சோதனைக்குப் பிறகு பூமியின் காந்தப்புலத்தில் மாற்றம் ஏற்பட்டது. இது பெரிய அளவிலான கதிர்வீச்சை ஏற்படுத்தியது. அமெரிக்கா இதைத் தான் ஏற்படுத்தியது. 

இது ஹவாயின் பாதி இடங்களில் மின்சார சீர்குலைவை ஏற்படுத்தியது. மேலும் இது பல தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதித்தது. அசாதாரண கதிர்வீச்சு ஒட்டு மொத்த பூமியையும் அழிக்கக் கூடும். 

வரலாற்றில் மிகவும் திகிலூட்டும் சோதனைகளின் பட்டியலில் ஸ்டார்ஃபிஷ் பிரைம் முக்கிய இடம் பெற்றது.

இறந்தவருக்கு உயிர் கொடுப்பது

மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகள் !

உலகில் யாராவது இறந்தவர்களை மீண்டும் வாழ வைக்க முடியுமா? ராபர்ட் ஈ. கார்னிஷ் என்ற பெயரில் ஒரு மருத்துவர் இதைச் செய்ய முயன்றார். இறந்த உடல்களை சீசாவில் வைத்து அவர்களை உயிர்ப்பிக்க முயன்றார், 

இதன் மூலம் இரத்தம் உடல் முழுவதும் நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும் இரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மருந்து மற்றும் எபிநெஃப்ரின் செலுத்தப் பட்டது. 

இந்த சோதனை தோல்வியில் முடிந்தது அவர் சோதனை செய்த யாரும் உயிர் பெறவில்லை. 

எண்ணெய் குளியல் சரியா? எப்படி குளிக்கலாம்?

ஆனால் இந்த சோதனையில் இரண்டு நாய்கள் உயிர் பெற்றன ஆனால் அவை மீண்டும் இறந்தன. மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகளில் இது முக்கியமானதாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings