திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள நாரணமங்கலத்தைச் சேர்ந்த வீரப்பன்-அனிதா தம்பதியின் மகன் யுவனேஷ்.
தீராத சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால். அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எப்பொழுதும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் !
விவசாய கூலியான வீரப்பன், செப்டம்பர் 11 அன்று தனது மகனை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவர் 53 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். பெற்றோர் கூறுகையில், நண்பர்களிடம் பணம் திரட்டி, வீட்டை அடகு வைத்து, நிலத்தை விற்று, 9 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினர்.
கடந்த வாரம், மருத்துவமனை மேலும் 2 லட்சம் கேட்டது, நாங்கள் எங்கள் மகனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக அவர்களிடம் கூறினோம்.
ஆனால், யுவனேஷை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மறுத்து விட்டது என்று பெற்றோர் கூறினர்.
இதற்கிடையில், வியாழக்கிழமை, யுவனேஷ் இறந்ததால், உடலைப் பெற பெற்றோர் மருத்துவமனையை அணுகிய போது, உடலை விடுவிப்பதற்காக ரூ.11 லட்சம் கூடுதல் சிகிச்சை கட்டணம் வேண்டும் என கேட்டனர்.
ஊளை சதையா நீங்கள்? இதை படியுங்கள் !
எங்கள் மகனின் உடலை தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை வேண்டிக் கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களிடமிருந்து ரூ.11 லட்சத்தை வசூலிப்பதில் உறுதியாக இருந்தனர்.
வேறு வழியின்றி திருவாரூர் கலெக்டரை சந்தித்து உதவி கேட்க முயன்றோம் என யுவனேஷின் தாய் அனிதா தெரிவித்தார். பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Thanks for Your Comments