கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்களை கத்துக்குட்டிகள் வீழ்த்தியது பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கோல் முதல் பாதியில் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இதை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் இரண்டாவது பாதியில் இரண்டு கோல்கள் அடித்து முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது சவுதி அரேபியா.
இது கால்பந்து உலகில் பேசுபொருளாக மாறியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி மன்னர் தங்கள் நாட்டிற்கு ஒருநாள் விடுமுறை அறிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இந்த வெற்றியை பற்றியே பேசி வந்தனர்.
பொதுவான ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 6 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாய் வரை இருக்கும். இதை உலகப் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும்.
சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மேலும் சவுதி அரேபிய வீரர்களின் சம்பளம் கூட இவ்வளவு இருக்காது.
குள்ளமான ஆண்கள் விஷயத்தில் கில்லாடிகள் !
இத்தகைய சூழலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப் போகிறார்களா? என்ற ஆச்சரியம் ஊடகங்கள், சமூக வலை தளங்களில் தீயாய் பரவத் தொடங்கியது.
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் கூட ரோல்ஸ் ராய்ஸ் செய்தியை பதிவிட்டு வந்தன. ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரிய வந்திருக்கிறது.
அர்ஜென்டினா அணிக்கு எதிராக முதல் கோலை அடித்தவருமான அல் ஷெஹ்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, சவுதி வீரர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அது உண்மையா? அப்படி கிடைத்தால் நீங்கள் என்ன கலரை தேர்வு செய்வீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, இந்த தகவல் உண்மையல்ல. நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் விளையாடவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
எங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதுதான் எங்களுக்கு கிடைத்த பரிசு மற்றும் சாதனை என்று குறிப்பிட்டார்.
That was exquisite @SaudiNT_EN 🇸🇦👏 #Qatar2022 #FIFAWorldCup pic.twitter.com/BJlFYwgzRM
— Road to 2022 (@roadto2022en) November 22, 2022
அப்படியெனில் யாரோ வதந்தியை பற்ற வைத்து விட்டு ரோல்ஸ் ராய்ஸ் என பரப்பி விட்டிருப்பது தெரிய வருகிறது.
அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?
அர்ஜென்டினா அணிக்கு எதிரான சவுதி அரேபியாவின் வெற்றி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியவை.
சிறப்பாக விளையாடிய அணிக்கு கிடைத்த தரமான வெற்றி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த வெற்றி கால்பந்து உலகை ஆசியாவை நோக்கி திருப்பியிருக்கிறது.
لاعب #المنتخب_السعودي صالح الشهري يلجم صحفي انجليزي حاول الايحاء ان لاعبي السعودية يلعبون من اجل المال بعد نفيه اشاعة مكافأة الروز رايس لكل لاعب.
— خلف الدوسري (@kalafaldossry) November 26, 2022
الصحفي: انه امر مؤسف اليس كذلك؟
الشهري: نحن هنا لخدمة وطننا وذلك هو الانجاز الاكبر💪🇸🇦🇸🇦🇸🇦
#السعوديه_بولندا
- pic.twitter.com/6uIT9fRggi
Thanks for Your Comments