பொருளாதார படிக்காத பாமர மனுஷன் காமராஜர் !

2 minute read
0
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் அவர் தனக்கே உரிய பாணியில் பேசியது. நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.
பொருளாதார படிக்காத பாமர மனுஷன் காமராஜர் !
ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.
 
எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன். அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடு வோம்னேன்.
 
இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது. கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்.
அரிசி பருப்பு உப்பு புளி மொளகா எண்ணெய் ன்னு ஒன்னும் கிடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது. ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்.
 
எப்படி வருவான்னேன். பணம் வேணும்னு உழைக்கிறாங்க.கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன் தான் வேலைக்கு வருவான்.
 
பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈர துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியது தான். ஊரே தூக்கம் வராம கெடக்கும். இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.
 
வெத்து பேப்பர் தான்னேன். உழைப்பு தான் பணம்ன்னேன். பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்பு தான். உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கிடைக்காது. ஒன்னுமே கிடையாது.

வீட்டில் ஆண்கள் ஓதுக்கப்படுகிறார்களா?

இப்ப தெரிஞ்சுதா.உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்.
 
இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன் சொன்னது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings