விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

0

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள்,  நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும்.

விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் அலாரம் அடிக்கும் போதே, அணைத்து விட்டு படுக்கையை வி்ட்டு எழுந்து இன்றைய நாளை தொடங்குங்கள்.  

காலை எழுந்த உடன்  மொபைலை தேடாதீர்கள். மொபைல் போன் உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளும். 

மொபைலை அலாரம் வைக்க பயன்படுத்தினால், அலாரத்தை ஆஃப் செய்து விட்டு , அங்கிருந்து எழுந்து விடுங்கள். 

இது போன்ற எளிமையான நடைமுறையை பழக்கமாக்கி கொண்டால் , நாள் முழுவதும் அமைதியாக அமைவதோடு, அதிக வேலை செய்யும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

புற்றுநோய் கட்டி எப்படி உருவாகுது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க !

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றி விடும். 

காலை எழுந்தவுடன் காப்பி, டீ குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது. 

தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் , உடல் வலி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பலவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலில் புது இரத்தம் உற்பத்தியாகும். 

இப்படி புது இரத்தம் உடலில் உற்பத்தியானால், நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் பிரச்சனை இல்லாமல் இருக்கும். 

விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும். 

இரத்த வெள்ளையணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும். உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும்.

தண்ணீர் மிகவும் சிறப்பான மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பொருள். 

அத்தகைய தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, வாந்தி, புற்றுநோய், தொண்டை பிரச்சனைகள், கண் பிரச்சனைகள், 

சிறுநீராக பிரச்சனைகள், டிபி, வயிற்றுப் போக்கு, தலைவலி மற்றும் நாள்பட்ட மூட்டு வலி போன்ற நோய்கள் குணமாகும். 

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப் பட்டது?

க்ரீன் டீ யில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் எதிர்ப்பு திறனை அதிகரிக்க்சச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. 

குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. ஆகவே காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ யுடன் தொடங்கலாம். 

அதன் பிறகு சிறிய அளிவலான உடற்பயிற்சி மிகவும் நல்லது. தசைகளை இளக்கி, நாள் முழுவதற்குமான சுறுசுறுப்பை இந்த உடற்பயிற்சி உருவாக்கும்.

உடற்பயிற்சியை முடித்த கையோடு குளியலறைக்கு ஓடாமல் மொட்டை மாடியிலோ, பால்கனியிலே அமர்ந்து அந்த அற்புதமான காலைப்பொழுதை உள்வாங்குங்கள். 

மேனியை தழுவிச் செல்லும் பூங்காற்றையும், கண்களை கூசாத காலை உதயத்தையும் ரசியுங்கள். 

விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

அப்படியே இன்று நாள் முழுவதும் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். 

ஒரு 5 நிமிடத்தை ஒதுக்கி தியானம் செய்யலாம், இல்லையேல் உங்களுக்குப் பிடித்த ஸ்லோகங்களைக் கூட சொல்லலாம் தவறில்லை. 

இவை மனதை அமைதிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த சக்தி தரும். காலை நேரத்தில் நாம் தவிர்க்க கூடாத விஷயங்களில் மிகவும் முக்கியமானது காலை உணவு. 

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். 

காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். 

வேலை நேரத்தில் டிக்டாக் செய்த பெண் ஊழியரால் பரபரப்பு !

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. 

காலையில் அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

காலை எழுந்தில் இருந்து இத்தனை விஷயங்களையும் திட்டமிட உங்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியமானது மட்டுமல்ல கட்டாயமானதும் கூட. 

நாள் முழுக்க கடுமையாக உழைப்பவர்கள் இரவில் எட்டுமணி தூக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.  

விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

இதனால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது. 

அதிக  நேரம் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினால் மூளையின் செல்கள் சீரான இடைவெளியில் ஓய்வு பெறுகிறது.  

இது உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்கிறது. தினந்தோறும் எட்டு மணி நேரம் தூங்கினால் வாழ்நாளின் அளவு நீடிக்கிறது.

நமது உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது.  இந்த ஹார்மோன் தான் நாம் பசியுடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை நமக்கு உணர்த்துகிறது.  

கோழி இறகால் சிக்கிய கொலையாளி - இளம்பெண் கொலை !

ஒருவர் சரியாக தூங்காவிட்டால் இந்த ஹார்மோனின் அளவு குறைந்துவிடும்.  மற்றும் அதிகப்படியான பசியையும் தூண்டும்.  

இதனால் நிறைய உணவை சாப்பிட வைப்பதுடன் பருமனாக்கி விடும்.  இதுவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டால் லெப்டின் அளவு சீராக இருக்கும். 

ஒருவர் தினந்தோறும் எட்டுமணி நேரம் தூங்கினால் அவர் மன அழுத்தத்திலிருந்து  விடுபடலாம்.

தூக்கம் இன்மையால் ஒருவர் துன்பப்பட்டால் அவரால் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்ய முடியாது.  

விடிகாலையில் எழுவது உங்கள் காலை பொழுதை மகிழ்ச்சியானதாக மாற்றும் !

ஒருவரின் செக்ஸ் வாழ்க்கையை தூக்கமின்மை பாதிப்படையச் செய்கிறது.  

எப்படி யென்றால் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிப்படைகிறது.  

நீங்க உண்மையிலேயே புத்திசாலியா? இந்த அறிகுறிகள் இருக்கா?

இதனால் செக்ஸ் வாழ்க்கை தடைபடுகிறது.  எனவே தினந்தோறும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டு, மனைவியுடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்.

இது போன்ற சின்னி சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும் உங்களுடைய ஒவ்வொரு நாளும் இனிமையான நாளாக அமையும்.. அப்புறம் என்ன கூலா ஜாலியா வேலையை பாருங்க..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings