உலகின் பல்வேறு பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 200 திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்தன.
சிலி மற்றும் தென்னாபிரிக்காவில் திமிங்கலங்கள் இப்படித் தான் அடிக்கடி ஒதுங்குகின்றன.
திமிங்கலங்கள் பெருமளவில் இறக்கும் இடங்களில் ஒன்று நியூசிலாந்தில் உள்ள ஃபேவெல் ஸ்பிட் கடற்கரையிலாகும்.
119 ஆண்டுகள் வாழ்ந்த பெண்... ரகசியம் இது தான் !
இந்த கடற்கரைக்கு அருகிலுள்ள பழங்கால கிராம வாசிகளின் கூற்றுப்படி, திமிங்கலங்கள் நீண்ட காலமாக ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது கடற்கரைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த வழியில் வரும் திமிங்கலங்களில், பைலட் திமிங்கலம் என்று அழைக்கப்படும் ஒரு இனம் இலங்கையிலும் அண்மையில் வந்து சேர்ந்துள்ளது.
திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் சோனா போன்ற சமிக்ஞை வழியாக செல்கின்றன.
கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களில் இருந்து, மக்கள் சக்தி வாய்ந்த சோனா சமிக்ஞைகளை கடலுக்கு அனுப்புகிறார்கள்.
ஒரு புறம், இந்த சோனாக்கள் திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களின் மென்மையான தசைகளை சேதப்படுத்தும். மறுபுறம், திமிங்கலங்களின் நீர்வாழ் செயன்முறையை சீர் குலைக்கின்றன.
இதன் பொருள் திமிங்கலத்தின் திசையைக் கண்டறியும் அமைப்பு இந்த சோனாக்களால் தொந்தரவு செய்யப்படுகிறது. எனவே திமிங்கலங்கள் இந்த சோனா சமிக்ஞை களிலிருந்து விலக முயற்சிக்கின்றன.
அந்த முயற்சியின் விளைவாக திமிங்கலங்கள் கரைக்கு வருகின்றன என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பைலட் திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் போன்ற உயிரினங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன.
வெற்றிக்குத் தேவை வேகமும், விவேகமும் !
இவை வேட்டையாடுதல், கூட்டாக பயணம் செய்வது போன்ற பல விஷயங்களை கூட்டாகவே செய்கின்றன.
எனவே இந்த உயிரினங்களில் ஒன்று அல்லது இரண்டுக்கு ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் அவை அதை தனித்தே விட்டு விடாது.
அவை அந்த உயிரினத்துடன் சேர்ந்தே நீந்துகின்றன. இது போன்ற சிக்கலில் இருக்கும் உயிரினங்களை காப்பாற்ற மற்ற திமிங்கலங்களும் சேர்ந்தே கரைக்கு வருகின்றன என்று ஒரு கருத்தும் உள்ளது.
சூரியனின் கதிர்கள் சில நேரங்களில் பூமியின் காந்தப்புலத்தை சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. இந்த உயிரினங்களின் கண்காணிப்பு முறைகளில் பூமியின் காந்தப் புலமும் ஒரு பங்கு வகிக்கிறது.
எனவே பூமியின் காந்தப் புலத்தின் மாற்றங்கள் காரணமாக திமிங்கலங்கள் கரைக்குச் செல்லும் வழியில் செல்கின்றன என்றும் கூறப்படுகிறது.
திமிங்கலங்களை வேட்டையாடுவது தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் அவற்றை வேட்டையாட படகுகளில் வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.
இது போன்ற நேரங்களில் திமிங்கலங்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடற்கரை நோக்கி செல்லக் கூடும். அத்தோடு சீல் எனும் உயிரினங்களை வேட்டையாட திமிங்கலங்களும் விரும்புகின்றன.
சீல் என்பவை பெரும்பாலும் கடற்கரையில் காணப்படுகின்றன. ஒரு சீலை பின்னால் துரத்தும் சில திமிங்கலங்கள் கடற்கரையில் வந்து சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
கரைக்கு வந்து இறக்கும் பெரிய திமிங்கலங்கள் உள்ளன. இந்த பெரிய திமிங்கலங்களை பார்க்கச் சென்று அவற்றுடன் புகைப்படம் எடுக்க மக்கள் ஆசைப் படுகிறார்கள்.
ஆனால் ஒரு பெரிய திமிங்கலம் கடற்கரையில் இறக்கும் போது, அதன் அருகில் செல்வது நல்லதல்ல. ஏனெனில் மரணித்த திமிங்கலத்தின் உள் உடல் வாயுவை நிரப்புகிறது.
HIV நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டுமா?
இந்த வாயுக்கள் திடீரென வெடித்து திமிங்கலத்தின் இரத்தத்திலும் சதைகளிலும் ஊடுருவுகின்றன. அந்த வழியில் இறக்கும் திமிங்கலங்கள் பல மீன்பிடி வலைகளில் சிக்கியுள்ளன.
அல்லது வேறு சில காரணங்களால் நோய் வாய்ப்பட்டுள்ளன அல்லது காயமடைந்துள்ளன. ஆனால் அனைத்து திமிங்கலங்களும் நோய்வாய்ப் பட்டவை அல்லது ஆபத்தானவை அல்ல.
Thanks for Your Comments