ஆடை இல்லா விட்டாலும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.. பாபா ராம்தேவ் !

0

இன்னொரு சர்ச்சை பேச்சு, அதே மகாராஷ்டிர மாநிலத்தில் கிளம்பி உள்ளது. பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து பேசியது தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. 

ஆடை இல்லா விட்டாலும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.. பாபா ராம்தேவ் !
கடந்த 2006ம் ஆண்டு பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர். 

உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகின்றன.

கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனர் பாபா ராம்தேவ், 

துணை முதல்வெ தேவேந்திர பட்நாவிஸ் மனைவில் அம்ருதா பட்நாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன். முன் வரிசையில் அமர்ந்திருப்போர் சேலை உடுத்திக் கொண்டுள்ளனர். 

சேலையில் நீங்கள் அழகாக உள்ளனர். சல்வார் உடுத்திக் கொண்டிருப்பவர்களும் அழகாக உள்ளனர். பெண்கள் பொதுவாக சேலை, சல்வார் கமீஸ் ஆகிய உடைகளில் அழகாக இருப்பார்கள். 

என்னை பொறுத்தவரை பெண்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் போதும் அழகாக இருப்பார்கள். சமூகத்திற்காக நீங்கள் உடை உடுத்துகிறீர்கள். 

குழந்தைகள் 10 வயது வரை நிர்வாணமாக இருக்கிறார்கள். அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள். 

அவர்கள் எதுவும் அணியா விட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார். 

சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

ஆனால் தற்போதைய நாட்களில் 5 அடுக்குகள் கொண்ட உடைகளை குழந்தைகள் அணிகிறார்கள் என பாபா ராம்தேவ் பேசினார்.

இந்த நிலையில் பெண்கள் குறித்த ராம்தேவ் பேசிய பேச்சு சமூக வலை தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவல், 

மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவியின் முன்பு பாபா ராம்தேவ், பெண்கள் குறித்து அசிங்கமான கருத்துகளை கூறியுள்ளார். 

இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த கருத்துக்காக நாட்டு மக்கள் முன்பு பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும், கணடனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டு வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு போலீசாரை ஏமாற்ற முயன்றபோது பாபா ராம்தேவ் பிடிபட்டார். 

அந்த நிகழ்வை மேற்கோள் காட்டி, பெண்களின் உடையை அணிந்து கொண்டு பாபா ராம்தேவ் ஓடி ஒளிந்தது ஏன் என்று இப்போது தான் புரிகிறது. 

அவரது மூளையில் குறைபாடு இருப்பதால் தான் பாபா ராம்தேவ் இப்படியான கருத்துகளை பேசுகிறார் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்,  சத்ரபதி சிவாஜி குறித்து ஆளுநர் சர்ச்சை கருத்து கூறும் போதும், மகாராஷ்டிர அரசு அமைதியாக இருந்தது. 

சுவையான ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

நமது கிராமங்களை கர்நாடாக எடுத்துக் கொள்ளும் என கர்நாடக முதல்வர் கூறிய போதும் அமைதியாக இருந்தது. 

தற்போது பாஜக பிரச்சாகரர் பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து இழிவான கருத்து கூறிய போதும் அமைதி காத்து வருகிறது. 

மகாராஷ்டிரா அரசு தனது நாக்கை டெல்லியில் அடமானம் வைத்து விட்டதா? என காட்டமாக கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ்வின் சர்ச்சை கருத்து குறித்து அவரும் இதுவரை விளக்கம் தரவில்லை. பாஜகவும் தனது கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings