கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க். நியூயார்க் நகரத்தின் மிட் டவுன் மன் ஹாட்டனில் உள்ள 42வது தெரு மற்றும் பார்க் அவின்வியூயில் அமைந்துள்ள ஒரு பயணிகள் ரயில் நிலையம் ஆகும்.
1913 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கிராண்ட் சென்ட்ரல் 48 ஏக்கர் (19 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது .மற்றும் 44 நடைமேடைகளை கொண்டுள்ளது.
இது உலகில் உள்ள மற்ற ரயில் நிலையங்களை காட்டிலும் அதிக பிளாட்பார்ம்கள், தரைக்குக் கீழே ,மேல் மட்டத்தில் 30 தடங்களும், கீழ் தளத்தில் 26 தடங்களும் சேவை செய்கின்றன.
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
மொத்தம், 67 தண்டவாளங்கள் உள்ளன. இதில் உள்ள ரயில் யார்டு மற்றும் சைடிங்ஸ் ;இவற்றில் 43 தடங்கள் பயணிகள் சேவைக்காக பயன்படுத்தப் படுகின்றன.
மீதம் உள்ளவை இரண்டு டஜன் ரயில்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது.
கிழக்குப் பக்க அணுகலின் ஒரு பகுதியாக தற்போது உள்ள நிலையத்தின் அடியில் ஆழமாக 2 புதிய நிலைகளில் மேலும் எட்டு தடங்கள் மற்றும் நான்கு தளங்கள் கட்டப்படுகின்றன.
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ஆண்டுக்கு 67 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்கிறது. காலை நேர நெரிசலில், ஒவ்வொரு 58 வினாடிக்கும் ஒரு ரயில் முனையத்தை வந்து அடைகிறது.
ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க் நகரில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சிறந்த கட்டிடக்கலை சாதனைகளில், அதிசயத்தின் பல பகுதிகளை உள்ளடக்கியது.
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் நியூயார்க் நகரத்தின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு உலகளாவிய அடையாளமாக உள்ளது.
Thanks for Your Comments