பிரிட்டன் பிரதமராகிய ரிஷி சுனக்... யார் இவர்?

0

ரிஷி சுனக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன் வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930 க்களில் குஜ்ரன் வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது. 

பிரிட்டன் பிரதமராகிய ரிஷி சுனக்... யார் இவர்?
குஜ்ரன் வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. 

ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா. பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. 

கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன். பர்மாவிலும் இதேபோல் தான் நடந்தது. 

காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?

ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.

ஆனால் பர்மாவில் இருந்து இந்தியர்கள் அடித்து விரட்டபட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அள்ளக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். 

அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 250,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். 

ப்ரிட்டிஷ் ஆசியர்கள் என அழைக்கப் பட்டர்கள். அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது. 

சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக் கொண்டது. 

அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார். டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டார். 

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?
அவர்களுக்கு பிறந்தவ்ர் தான் ரிஷி சுனாக். பிறந்த ஆண்டு 1980. நல்ல வசதியான குடும்பம். ரிஷியும் நல்லா படிக்கும் மாணவன். 

ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள்.

அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார். 

அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்று விட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். 

எம்பி ஆனார். மந்திரி ஆனார். இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.

இந்தியாவின் மருமகன், ஆனால் இந்தியர் அல்ல.

ஆபிரிக்காவின் மகன், ஆனால் ஆபிரிக்கர் அல்ல.

ப்ரிட்டிஷ் குடிமகன், ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள். பூர்விகம் பாகிஸ்தான், ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை.

இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரன்டு ஓடவில்லை. (ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம் :-)

செம்பருத்தி பூ மருத்துவ பயன்கள் !

ப்ரிட்டன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இரண்டும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சாதிப்பாரா ரிஷி? 

மார்கரெட் தாட்சர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலின் கட்சியையும், நாட்டையும் கரையேற்றுவாரா? பார்ப்போம்.~ நியாண்டர் செல்வன்....

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings