உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடு அல்லது 75 நிமிட தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதை பார்த்து ரசித்து வருகின்றனர்.
நம் உடலில் உள்ள நரம்புகளில் நடப்பது என்ன?
அதே சமயம், கால்பந்து போட்டிகளுக்கு இடையே வீரர்கள் வாய் கொப்பளித்து மைதானத்திலேயே துப்புவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?
சக வீரர்கள் விளையாடும் இடம் என்று கூட பார்க்காமல் கொப்பளித்து துப்பும் வீரர்களின் இந்த நடவடிக்கை தவறான நடத்தையாக தோன்றுகிறது அல்லவா!
ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கால்பந்து வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கு இடையே வாய் கொப்பளித்து மைதானத்திலேயே துப்புவதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறதாம்...
வாய் கொப்பளிப்பதில் என்ன அறிவியல் இருக்கப் போகிறது?
சாதாரணமாக சாப்பிட்டு வாய் கொப்பளித்தால் உணவுத் துணுக்குகள் இன்றி வாய் சுத்தமாகும், விளையாடும் போது ஏன் அப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா.
ஆணும் பெண்ணும் - வித்தியாசங்கள் உண்டு !
காரணம் என்ன :
நாம் உடற்பயிற்சி செய்யும் போது நமது எச்சிலுடன் கலக்கும் புரதத்தின் அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக MUC5B என்ற சளி போன்ற ஒன்று கலப்பதால் எச்சிலின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் அதனை விழுங்குவதற்கு அதிக சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக, கால்பந்து, ஹாக்கி போன்ற, மைதானத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற விளையாட்டுகளின் போது வீரர்களின் உடல் அதி தீவிரமானதாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் இந்த அடர்த்தி மிகுந்த எச்சிலை விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான் மைதானத்தில் கொப்பளித்து துப்புவதற்கு அனுமதி அளிக்கப் படுகிறது.
கால்பந்து, ரக்ஃபி போன்ற விளையாட்டு களுக்கான மைதானங்கள் பெரியது.
இதில், வீரர்கள் எச்சில் துப்புவதற்காக பவுண்டரி லைனை நோக்கிச் செல்ல முடியாது என்பதால் மட்டுமே இந்த சிறப்பு அனுமதி வழங்கப் படுகிறதாம்.
இதய இயக்கம் நின்றவருக்கு முதலுதவி ! #CPR
இதையே டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் செய்தால் அபராதம் விதிக்கப்படும். உடல் அதிகம் இயங்கும் போது நாம் வாய் வழியே மூச்சு விடத் தொடங்குகிறோம்.
அந்த சமயத்தில் அதிக காற்றோட்டம் காரணமாக வாய் வறட்சி அடைவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த MUC5B வகை எச்சில் ஊறுகிறதாம்.
அதே சமயம், அடிக்கடி தொண்டை வரையில் கொப்பளித்து துப்பினால் மட்டுமே வீரர்கள் இயல்பாக உணர முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கார்ப் ரின்சிங் ஒரு காரணம் :
கார்ப் ரின்சிங் என்பது கார்ஃபோ ஹைட்ரேட் நிறைந்த சொல்யூஷனை வாயில் கொப்பளித்து துப்பும் பழக்கம் ஆகும்.
விளையாட்டுப் போட்டிகளின் போது வீரர்களுக்கு அதிக ஆற்றல் தேவை. அந்த ஆற்றலுக்கு உடலில் உள்ள கார்ஃபோ ஹைட்ரேட் சத்தை எரிக்க வேண்டும்.
ஆடிப்பெருக்கு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன?
இதை நோக்கி மூளையின் செயல்பாட்டை தூண்டும் விதமாகவே அந்த கார்ஃபோஹைட்ரேட் சொல்யூஷனை கொப்பளித்து துப்புகின்றனர்.
சாதாரணமாக வாய் கொப்பளிப்பதில் இவ்வளவு அறிவியல் பூர்வமான தகவல்கள் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது.
Thanks for Your Comments